;
Athirady Tamil News

வயிற்று வலியை குணப்படுத்தும் ஏலம்!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பாதுகாப்பான எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதும், வீக்கம், வலியை போக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்கவல்லதுமான ஏலத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது ஏலம். இது, வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்றும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக விளங்குகிறது. ஏலத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இதயத்தை சீர் செய்ய கூடியது. ரத்த அழுத்தத்தை சமன் செய்யவல்லது. வயிற்று கடுப்பை போக்கும் தன்மை

ஏலத்தை பயன்படுத்தி வயிற்றுவலி, வயிற்று உப்புசத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஏலம், சுக்குப்பொடி, சீரகம், நெல்லி வற்றல், லவங்கம், பனங்கற்கண்டு.செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதனுடன் சிறிது ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, கால் ஸ்பூன் சீரகம், ஊறவைத்த நெல்லி வற்றல், லவங்கம், பங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுவலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் குணமாகும். வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும்.

காட்டு ஏலத்தை பயன்படுத்தி கல்லடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: காட்டு ஏலம், வெள்ளரி விதை, பனங்கற்கண்டு.
செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதில், காட்டு ஏலத்தை பொடி செய்து அரை ஸ்பூன் அளவுக்கு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரை எரிச்சல், கல்லடைப்பு போன்ற பிரச்னைகள் குணமாகும். சிறுநீரை பெருக்கும். கற்களை கரைத்து வெளியேற்றும். கைகால்களில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும். ஏலத்தை போன்ற குணமுடையது காட்டு ஏலம். இது, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

காட்டு ஏலத்தை பயன்படுத்தி தலைவலி, கழுத்துவலியை சரிசெய்யும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: காட்டு ஏலம், தேங்காய் எண்ணெய், சுக்குப்பொடி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் சிறிது சுக்குப்பொடி, காட்டு ஏலப்பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை தலைவலி, கழுத்துவலி இருக்கும்போது மேல்பூச்சாக பயன்படுத்தலாம். இது, வீக்கம், வலியை போக்க கூடியதாக விளங்குகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.அதிக காய்ச்சல் ஏற்படும்போது உதடு, வாயில் ஏற்படும் கொப்புளங்களை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, வெண்ணெய்.செய்முறை: தோட்டங்களில் காணப்படும் பருப்பு கீரையை நன்றாக அரைத்து, வெண்ணெய் சேர்த்து உதடு, வாய்ப்புண்கள் மீது பூச வேண்டும். இவ்வாறு செய்தால் உதடு, வாயில் ஏற்படும் கொப்புளங்கள், புண்கள் சரியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*