;
Athirady Tamil News

சாவகச்சேரி விவசாயிக்கு “புளொட்” சுவிஸ் தோழரினால், “M.F” ஊடாக துவிச்சக்கர வண்டி வழங்கல்.. (படங்கள்)

0

சாவகச்சேரி விவசாயிக்கு “புளொட்” சுவிஸ் தோழரினால், “M.F” ஊடாக துவிச்சக்கர வண்டி வழங்கல்.. (படங்கள்)

புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களால் கெற்பேலி மத்தியை சேர்ந்த செ.பரமேஸ்வரன் என்ற விவசாயிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று காலை சாவகச்சேரியில் இடம்பெற்றது.

இதன்போது புளொட்டின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டியினை வழங்கி வைத்தனர்.

மேற்படி விவசாயத் தொழில் செய்பவர் “தனது விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று, விற்பனை செய்வதற்கு உதவியாக துவிச்சக்கர வண்டி தேவை” என “மாணிக்கதாசன் பவுண்டேசனிடம்” முன்வைத்த கோரிக்கையை ஏற்று, மேற்படி துவிச்சக்கர வண்டியானது புளொட் சுவிஸ் கிளைத் தோழர் செல்வபாலனின் (லெனின்) முழுமையான நிதிப்பங்களிப்பில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பில் தோழர் செல்வபாலனின் தாயக இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 4 =

*