;
Athirady Tamil News

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு மற்றும் ஐன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.