;
Athirady Tamil News

2022ல் தான் கொரோனா மருந்து கிடைக்குமாம்.. காரணத்தை வெளியிட்ட ஹு விஞ்ஞானி.. ஏன் தெரியுமா? (வீடியோ, படங்கள்)

0

இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமானவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் 2022 வரை காத்திருக்க வேண்டும் என்று. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகலாம், மேலும் அதைப் பரப்பவும் செய்வார்கள். எனினும் வயதானவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களைக் காட்டிலும் அவர்கள் கடுமையான சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு யாராவது தரமான மருந்து கண்டுபிடித்தால், நாடுகளும், உலக சுகாதார அமைப்புகள் சர்வதேச அமைப்புகளும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேலை செய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் வரிசை பணியாளர்களுக்கு முதலிலும், மற்றவர்களுக்கு அதைத் தொடர்ந்து வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அதைத்தொடர்ந்து ஆரோக்கியமான, மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்க கொடுக்க வேண்டும்.

தீவிர சோதனை

கொரோனாவிற்கு மருந்து எப்போது என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்லி பல்வேறு நாடுகள் தீவிர சோதனை நடத்துகின்றன. எதிலுமே உலக சுகாதார மையம் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கவில்லை.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசுகையில், “மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜனவரி முதல் தேதி அல்லது ஏப்ரல் முதல் தேதியில் எங்களுக்கு ஒரு தடுப்பூசி கிடைக்கப்போகிறது. அதன்பின்னரே இயல்பு நிலைக்கு வரும். எனினும் அந்த மருந்துகளும் சரியாக செயல்படும் என்று சொல்லிவிட முடியாது.

இளைஞர்களே காத்திருங்கள்

கொரோனாவை தடுக்க செய்ய வேண்டிய செயல்கள் என உங்களுக்கு நிறைய வழிகாட்டுதல்கள் வரும். ஆனால் சராசரியான நபர்கள், ஆரோக்கியமான, இளைஞர்கள் தடுப்பூசியை பெற 2022 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

தடுப்பூசி எப்படி கிடைக்கும்

இதனிடையே யுனிசெப்பில் நோய்த்தடுப்புத் தலைவரான ராபின் நாண்டி ஒரு பேட்டியில் கூறும் போது, “உலகெங்கிலும் உள்ள 7 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆரம்ப ஆண்டுகளில் தடுப்பூசிகள் மிகக் குறைந்த அளவில் கிடைக்கப் போகின்றன. சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் முதலில் தடுப்பூசி தர வேண்டும். அதன்பிறகே மற்றவர்களுக்கு தர வேண்டும் என்றார்.

50 சதவீதம் பயன்

இதனிடையே சில விஞ்ஞானிகள் ஆரம்பகால தடுப்பூசிகளால் பாதி அளவே பயன் கிடைக்கும் என்று எச்சரித்துள்ளனர். அமெரிக்க. உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒரு தடுப்பூசி அமெரிக்காவில் ஒப்புதல் பெற குறைந்தபட்சம் 50% பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது, இருப்பினும் அதிக செயல்திறனை அந்த அமைப்பு எதிர்பார்க்கிறது.

கோவாக்ஸ் கூட்டமைப்பு

தற்போதைய நிலையில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் கொரோனா தடுப்பூசி யாராவது கண்டுபிடித்தால் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன. இப்படி கோரிக்கை வைத்துள்ள நாடுகள் எல்லாமே தடுப்பூசியை கண்டுபிடிக்க தங்களால் ஆன முயற்சியையும் முதலீட்டையும் செய்து வருகின்றன. மக்கள்தொகையின் அடிப்படையில் மருந்தின் அளவுகளை ஒதுக்க ஒப்புக் கொண்டிருக்கின்றன.

ஒரு டோஸ் தருவது

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி அளவிலான பாதுகாப்பான தடுப்பூசிகளை வழங்குவதே குறிக்கோள் என்று மருந்து கேட்கும் கோவாக்ஸ் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதாவாது உலகின் கால் பகுதியினருக்கு ஒரு டோஸ் ஆவாது வழங்கிவிட வேண்டும் என்று விரும்புகிறது. தறபோதைய நிலையில் சீனா,, தடுப்பூசியை குறிப்பிட்ட அளவு ராணுவத்திற்கு வழங்கி உள்ளது. ரஷ்யா இந்த வாரம் இரண்டாவது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது

கொரோனா மருந்து

அதேநேரம் கோவாக்ஸ் முயற்சியில் சேராத அமெரிக்கா, அதற்கு பதிலாக ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் என அழைக்கப்படும் அதன் தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளது. ஏழு தடுப்பூசிகள் இதில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவிற்கு 700 மில்லியன் டோஸ் தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று கணிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அங்குமே நோய் வாய்ப்படாத இளைஞர்கள் மருந்தை பெற அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா மருந்து கிடைக்க உலகின் நோய்வாய்ப்டாதவர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
கொரோனாவை பத்தி பேசினாலே.. டிரம்ப் பீதியாகி விடுறாரே.. போட்டு தாக்கிய பிடன்!!

சோனாவை வாட்டிய தனிமை.. கரெக்டாக கிடைத்த மகேஷின் அரவணைப்பு.. திடீர்னு.. ஜில்லிட வைக்கும் சம்பவம்!

வத்தளை – கொரோனா நிலவரம் என்ன?

கொவிட் தடுப்பு ஒழுங்கு முறைகள் – வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்திட்டார்!!

இரத்தினபுரியில் 716 பேர் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா அச்சம் – கொழும்பு மாநாகர சபையின் அலுவலகமொன்று மூடப்பட்டது!!

புதிதாக வரும் கொவிட்-19 நோயாளருக்காக 168 கட்டில்கள் மட்டுமே உள்ளன!!

பல தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதால் ஆபத்து – பொலிஸ்பேச்சாளர்!!

பல்கலைகழக மருத்துவ பீடங்களில் PCR பரிசோதனை!!

கட்டுநாயக்க பொலிஸ் பகுதியிலும் ஊரடங்கு!!

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 6 குழுக்கள் கடமையில்!!

சீதுவ தங்கும் விடுதியில் 42 பேருக்கு கொரோனா!!

தொழிற்சாலை நிர்வாகங்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளவும் : சுகாதார அமைச்சர்!!

மேலும் 194 பேருக்கு கொரோனா!!

தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது!!

21 மாவட்டங்களில் கொரோனா: கொழும்பில் 160 பேர் இனங்காணல்!!

கடவத்தையிலிருந்து காலிக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு கொரோனா -ஏனைய பயணிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 1 =

*