;
Athirady Tamil News

திருட்டுப்பய சார் இந்த பாலாஜி.. ரம்யா பாண்டியனிடம் வசமா மாட்டிக்கிட்டாரு.. உஷார் இல்லாத ஆஜீத்! (வீடியோ, படங்கள்)

0

ஆஜீத்திடம் இருந்து அந்த அலாவுதீன் பூதத்தை அசால்ட்டா ஆட்டையைப் போட்டுட்டாரு பாலாஜி முருகதாஸ். ஆடலும் பாடலும் நிகழ்ச்சி, அர்ச்சனா என்ட்ரி என 11ம் நாள் எபிசோட் நல்லாவே களை கட்டியது.

ஆனால், எல்லாத்தையும் விட கடைசியா நடந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை திருடும் படலம் தான் எல்லாத்தையும் விட சிறப்பாக இருந்தது.

தாய்மை குணத்துடன்

வயசானாலும், கொஞ்சம் கூட பெருந்தன்மையே இல்லாமல், கேப்ரில்லா, ஆஜீத் போன்ற இளம் வயது போட்டியாளர்களை மட்டம் தட்டி வெளியேற்ற நினைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால், தாய்மை உள்ளத்துடன் நடந்து கொண்ட முதல் வார தலைவி ரம்யா பாண்டியன், எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்துக்கு வழங்கினார்.

ஆட்டமே இனி தான்

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் யாருகிட்ட இருக்கிறதோ, அவர்கள் இந்த வீட்டில் இருந்து வெளியேற மாட்டார்கள். மக்கள் போடும் ஓட்டுக்களை தாண்டியும் அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் என்கிற அலாவுதீன் பூதம் காப்பாற்றும் என பிக் பாஸ் கூறியுள்ளார். அதனால், அதனை ஆஜீத்திடம் இருந்து கைப்பற்றும் படலம் நேற்றே ஆரம்பித்து விட்டது.

திருட்டுப்பய சார்

இந்த பாலாஜி வில்லன் மாதிரியே மொறைச்சி மொறைச்சி பார்த்துகிட்டே இருந்த பாலாஜி முருகதாஸ், நேற்று ஆஜீத்திடம் தனது கைவரிசையை அழகாக காட்டினார். ஆஜீத் தனது சூட் கேஸ், பனியன், பேன்ட் என பல இடங்களில் அந்த பாஸை ஒளித்து வைத்த நிலையில், கடைசியாக கார்டன் ஏரியாவில் உள்ள புல் கார்ப்பெட்டில் மறைத்து வைத்தார். ஆனால், அதை அறிந்து கொண்ட பாலாஜி அசால்ட்டா அதை திருடிவிட்டார்.

எதற்காக திருடினேன்

மேலும், பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு வந்து நின்ற பாலாஜி முருகதாஸ், ஆஜீத்தின் உஷார் இல்லாத தன்மையை அவனுக்கு புரிய வைக்கவே தான் இதை எடுத்துள்ளதாகவும், ஒரு நாள் அவனை நல்லா தேடவிட்டுவிட்டு பிறகு தந்து விடுகிறேன் என்றும் கூறி, தன்னுடைய நல்ல மனசை வெளிப்படுத்தி இருந்தார்.

அப்செட்டான ஆஜீத்

கார்டன் ஏரியாவில் தான் ஃப்ரீபாஸை ஒளித்து வைத்த இடம் இப்போ ஓப்பனாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியான ஆஜீத், போச்சு யார் எடுத்தா என எதிரே வந்த ரம்யா பாண்டியன், ஷிவானி, சம்யுக்தா உள்ளிட்டோரிடம் கேட்க, நீ ஒண்ணும் பிராங்க் பண்ணலயே என கேட்டனர். மேஜிக் டிக்கெட்டை தவற விட்டுட்டோமேன்னு அழுவாத குறையாக அப்செட்டானான் ஆஜீத்.

சோமசேகர் தான்

உடனடியாக அங்கே வந்து ஒன்றுமே தெரியாதவன் போல பாலாஜி முருகதாஸ் ஆஜீத், ரம்யா பாண்டியன், ஷிவானி உடன் சேர்ந்து தேட ஆரம்பித்தார். ஆஜீத்தின் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் காணாமல் போனதை அறிந்த கேபி, சோம்ஸ்.. சோம்ஸ்.. சோமஸ் தான் ஒரு மணி நேரமா காணலை அவர் தான் எடுத்திருப்பார் என சந்தேகத்தை கிளப்பினார்.

பேட் இன்ஃப்ளுயன்ஸ்

ரம்யா நீயே எடுத்துட்டியா என பாலாஜி ரம்யா பக்கம் கத்தியை திருப்ப, நான் எடுக்க நினைச்சா கொடுத்திருக்கவே மாட்டேன் என்றார். தொடர்ந்து சிரித்தபடியே பேசிய பாலாஜி ரம்யாவிடம் வசமாக மாட்டிக் கொண்டார். பாலா தான் திருடினது என ரம்யா சொன்னதும், அதை ஒப்புக்கொண்ட பாலாஜியை விஷம் விஷம் விஷம் என்கிற ரேஞ்சுக்கு குட்டி தீர்த்த ரம்யா, பேட் இன்ஃப்ளுயன்ஸ் பாலா கிட்ட உஷாரா இரு என ஆஜீத்தை எச்சரித்தார்.

டாய்லெட்டில் இருந்து

முதல்ல அவன் கிட்ட இருந்து அதை வாங்குடா என ஆஜீத்தை உஷார் படுத்தினார் ரம்யா, உடனே பாத்ரூம் ஏரியாவுக்கு ஆஜீத்தை கூட்டிப்போன பாலாஜி முருகதாஸ், டாய்லெட்டில், ஃப்ளஷ் டேங்குக்குள் இருந்து அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை எடுத்துக் கொடுத்து, இனிமே ஜாக்கிரதையா வச்சிக்கோ என்றார். அதுக்குள்ள ஆட்டம் முடிஞ்சிடுச்சே பிக் பாஸ் என்றும் ஃபீல் பண்ணினார்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − six =

*