;
Athirady Tamil News

பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதித்த 7,630 பேர் தலைமறைவு..!!

0

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளன. பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பலர் தவறான முகவரி மற்றும் தவறான செல்போன் எண்ணை மாநகராட்சிக்கு கொடுத்து விட்டு, பாதிப்பு உறுதியானதும் தலைமறைவாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அதன்படி, கடந்த 6-ந் தேதியில் இருந்து 12-ந் தேதி வரை ஒரு வாரத்தில் பெங்களூரு நகரில் உள்ள 8 மண்டலங்களிலும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 30 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர்களில் 7,630 பேர் தவறான முகவரி மற்றும் தவறான செல்போன் எண்ணை மாநகராட்சிக்கு கொடுத்திருந்தனர். இதனால் அவர்களை மாநகராட்சி அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 7,630 பேரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு பயந்து, அவர்கள் தலைமறைவாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான 7,630 பேர் தலைமறைவாகி இருப்பதுடன், அவர்கள் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தால், அவர்கள் மூலமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவாகி விட்டவர்களை கண்டுபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க போலீசாரின் உதவியையும் மாநகராட்சி அதிகாரிகள் நாடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 15 =

*