;
Athirady Tamil News

ரஷ்யாவில் வேகமெடுக்கும் கொரோனா – மேலும் 15150 பேருக்கு பாதிப்பு எண்ணிக்கை..!!

0

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3.94 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,69,313 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 232 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 10.56 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.89 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + one =

*