;
Athirady Tamil News

கோப்பாய் சந்தியில், மோட்டார் சைக்கில் மற்றும் டிப்பர் வாகனம் விபத்து; ஒருவர் பலி!!

0

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலீஸ் பிரிவிற்குற்பட்ட கோப்பாய் சந்தியில், மோட்டார் சைக்கில் மற்றும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் 36 வயதுடைய கருனாரட்ணம் கருனானந்தன் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது அதே வேளை விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்து.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seventeen =

*