;
Athirady Tamil News

சளி, இருமலுக்கு மருந்தாகும் மிளகு!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொடுகை போக்க கூடியதும், சளி, இருமலை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், காய்ச்சலை தணிக்க கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதுமான மிளகுவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது மிளகு. இதை உணவில் சேர்க்கும்போது சுவை, மணத்தை தருகிறது. காரமான பொருளான மிளகு, வலி நிவாரணியாகிறது. வீக்கத்தை கரைக்கிறது. மேல்பூச்சு மருந்தாகி வலியை போக்குகிறது. உணவில் விஷத்தன்மை இருந்தாலும், கடி விஷமாக இருந்தாலும் அந்த விஷத்தை முறிக்கும் மருந்தாகி பயன்தருகிறது. மிளகு விட்டமின், மினரல் போன்றவற்றை உள்ளடக்கியது.

மிளகை பயன்படுத்தி தலையில் உண்டாகும் பொடுகு, நமைச்சலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மிளகு, தேங்காய் எண்ணெய், பூண்டு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு பற்களை சேர்க்கவும். இது, பொறிந்ததும் இரண்டு சிட்டிகை மிளகுப்பொடி சேர்க்கவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளித்துவர பொடுகு, நமைச்சல் சரியாகும். முடி கொட்டுவது நிற்கும். மிளகு, பூண்டுவை பயன்படுத்திவர வீக்கம், வலி குணமாகும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும்.

மிளகை பயன்படுத்தி சளி, இருமல், வயிறு உப்புசத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மிளகு, மோர், தேன். செய்முறை: சிறிது மிளகு எடுத்து மோர் விட்டு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பொடி செய்து எடுக்கவும். இந்த பொடியுடன் சிறிது தேன் விட்டு கலந்து சாப்பிட சளி, இருமல், வயிறு உப்புசம் சரியாகும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம். மிளகு வயிற்றில் ஏற்படும் வாயுவை போக்கும் மருந்தாகிறது. வயிற்று வலி, இடுப்பு வலி, சிறுநீர் தாரையில் ஏற்படும் வலியை குணப்படுத்துகிறது. மூட்டுவலி, பல் வலியை சரிசெய்கிறது.

மிளகை பயன்படுத்தி குளிர் காய்ச்சல், யானை காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மிளகு, கழற்சிக்காய், பெருங்காயம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கழற்சிக்காய் பொடி, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல், குளிர்காய்ச்சல், யானை காய்ச்சல், மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சல் சரியாகும். வாயுவை போக்கும். வேர்வையை தூண்டும் தன்மை உடையது. உள் உறுப்புகளை சீராக செயல்பட தூண்டுகிறது.

முகத்தில் ஏற்படும் பருக்களை வடு இல்லாமல் ஆற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: வெங்காயம், மஞ்சள்.
செய்முறை: கஸ்தூரி மஞ்சளை, வெங்காய சாறுடன் சேர்த்து நன்றாக கலந்து பருக்களின் மீது போட்டு வருவதால், அது பழுத்து உடைந்து நச்சுகள் வெளியேறி பருக்கள் இல்லாமல் போகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*