;
Athirady Tamil News

ஆக்டிவ் கேஸ்கள் 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது -இந்தியாவில் கட்டுக்குள் வரும் கொரோனா..!!!

0

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 1.12 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 65.24 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 70816 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைகின்றனர். இதனால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,95,087 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன்மூலம் கடந்த ஒன்றரை மாதங்களில் முதல் முறையாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரம் அடங்கிய வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளால் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியிருப்பதாகவும், அதிக அளவில் நோயாளிகள் குணமடைவதுடன், உயிரிழப்பு குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + fifteen =

*