;
Athirady Tamil News

மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாரா? வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பது என்ன?

0

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உறுதி செய்துள்ளார்.
சண்டே மோர்னிங்கிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ சில மணிநேர விஜயமொன்றை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் புதுடில்லி செல்கின்றார் அதன் பின்னர் கொழும்பு வருவார் அது சிலமணிநேர குறுகிய விஜயமாக காணப்படும் என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவையும் பிரதமரையும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளையும் சந்திப்பார் என தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படுமா என்றகேள்விக்கு இது நட்புறவின் அடிப்படையிலான விஜயம் என்பதால் பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடமபெறுமா என்பது தெரியாது ஆனால் அவர்கள் தங்களுக்கு முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் எங்களுக்கு முக்கியமானதை நாங்கள் தெரியப்படுத்துவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வருவது இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி
தகவல் வெளியாகியிருந்ததை குறிப்பிடத்தக்கது

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இராஜாங்க செயலாளரின் விஜயம் தொடர்பாக வினவியவேளை மைக்பொம்பியோவின் விஜயம் குறித்து இன்னமும் உத்தியோகபூர்வமாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்தது என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டிருந்தது
இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் மைக்பொம்பியோ இலங்கைக்கு சில மணிநேர விஜயத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன என வெளிவிவகார செயலாளர் ஜயநத் கொலம்பகே தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மைக்பொம்பியோவின் விஜயத்தை உறுதி செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*