;
Athirady Tamil News

800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்.!! (வீடியோ)

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இவ்வாறு தெரிவித்துள்ளர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*