;
Athirady Tamil News

ஷிவானிக்கு இப்பவும் சப்போர்ட் பண்றாரே கமல்.. இந்த அட்மாஸ்பியர் இல்லன்னா டி.ஆர்.பி குறைஞ்சிடுமே! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அழகு பதுமையாக அமைதியாக இருக்கும் ஷிவானிக்கு அட்மாஸ்பியர் அவார்ட் கொடுத்தது பற்றி பேசிய கமல், அவருக்கு ஆதரவாக பேசியது ஷிவானி ஆர்மியினரை ஹேப்பி ஆக்கி இருக்கிறது. போன வாரமும் ஷிவானியை பாட சொல்லி கேட்டு ரசித்த கமல், இப்பவும் வேல்முருகனை கண்டுக்காமல் ஷிவானி பற்றி பேசியது கட்டம் கட்டி குறிப்பிட வேண்டிய ஒன்றாக அமைகிறது.

பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் இந்த அட்மாஸ்பியர் ரொம்பவே முக்கியம் என்பது அவருக்கு தெரியாமலா இருக்கும்.

அட்மாஸ்பியர்

ஷிவானி பிக் பாஸ் வீட்டின் செல்லக்குட்டியாக இந்த சீசனில் இருப்பது நம்ம ஷிவானி நாராயணன் தான். ஆனால், அர்ச்சனா அக்கா வந்தும் வராததும், நம்பியார் பிக் பாஸின் சூழ்ச்சியால், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு பட்டத்தை கொடுத்து அசிங்கப்படுத்தினார். ஷிவானிக்கு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் பட்டம் கொடுத்தை பார்த்த ரசிகர்களும் அவரது ஆர்மியனரும் அப்செட் ஆகினர்.

கோபமா கழட்டிய ஷிவானி

அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என்கிற பட்டம் தனக்கு கொடுக்கப்பட்டது பிடிக்காமல் உடனடியாக சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் அதனை கழட்டினார். ஆனால், பிக் பாஸ் உடனடியாக ஆஜராகி அதை கழுத்தில் போடுங்க ஷிவானி என குரல் கொடுத்ததும், மீண்டும் கடுப்பாகவே அதை மாட்டிக் கொண்டார்.

அட்மாஸ்பியரும் முக்கியம்

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பட்டம் கொடுக்கப்பட்டது குறித்து பேசிய கமல், போட்டியாளர்கள் மனங்கள் புண்படக் கூடாது என பக்குவமாக பேசினார். அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் பட்டம் யாருக்கு கொடுக்கப்பட்டது என கேட்ட போது, ஷிவானி, வேல்முருகன் எழுந்து நின்றனர். அவர்களை அமர வைத்து விட்டு, அட்மாஸ்பியரும் முக்கியம் என்றார்.

மனிதாபிமானத்துடன் மதிக்கணும்

ஹாலிவுட் சினிமாக்களில் எக்ஸ்ட்ராஸ் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துவார்கள். ஆனால், நாம் தான் மனிதாபிமானத்துடன் மதித்து, துணை நடிகர்கள், சக நடிகர்கள் என பெயர் வைத்து அழைத்து அவர்களை கவுரவப்படுத்துகிறோம் என்றார். மேலும், ஷிவானிக்கு சப்போர் செய்யும் விதமாக சில பல உதாரணங்களையும் சொன்னார்.

எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸ்

இன்னைக்கு கமல் சார் எம்.ஜி.ஆர் மாதிரி வந்துருக்காருன்னு பார்த்தால், அவர் சொல்லும் உதாரணங்களும் எம்.ஜி.ஆர் படத்தில் இருந்தே வந்தது மேலும் ஆச்சர்யம். (தேர்தல் வருதுல்ல).. அதோ அந்த பறவை போல பாட்டுக்கு, ல..லா.. லா.. லா.. சொல்ல ஆட்கள் இல்லை என்றால் நல்லா இருக்குமா என்றும், புதிய வானம் புதிய பூமி பாட்டுக்கு காஷ்மீர் தான் அட்மாஸ்பியர், இந்த பிக் பாஸ் வீட்டுக்கு ஷிவானி நீங்க தான் அட்மாஸ்பியர் என ஷிவானியின் கோபத்தை எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸ்களை கொண்டே தணித்தார்.

வேல்முருகனை கண்டுக்கல

ஆமாம் சாமி பட்டம் பற்றி பேசிய போது, வேல்முருகனிடம் பேசிய கமல், அட்மாஸ்பியர் பட்டம் பற்றி பேசும் போது, ஃபுல் ஃபோகஸும் ஷிவானி மேல் தான் இருந்தது. அவங்க தான் இந்த சீசனுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் ஏற்ற ஒரு முக்கிய காரணியக இருக்காங்கன்னு தெரிந்திருக்கும் என சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே ஷிவானியை பாட சொல்லி கமல் ரசித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

செம க்யூட்

மற்ற நாட்களில் ஷிவானி மேக்கப் இல்லாமல், வீட்டில் உம்மென மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார். கண்ணாடி ஜெயிலில் போடும் போதெல்லாம் செம காண்டானார். ஆனால், வீக்கெண்ட் வந்துட்டாளே செம மேக்கப் போட்டுக்கிட்டு, தனது ரசிகர்களுக்காக தரிசனம் கொடுத்து கமல் சொன்னது போலவே தலைவியாய் மாறி விடுகிறார்.

தப்பிச்சாச்சு

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை. என் ரசிகர்கள் ஓட்டுப் போட்டு காப்பாத்துவாங்க என நம்பிக்கையுடன் இருந்த ஷிவானியை அவங்க ரசிகர்கள் காப்பாத்துறாங்களோ இல்லையோ, நிச்சயம் பிக் பாஸே இந்த சீசனை நல்லா ஓட்ட, ஷிவானியை கடைசி வரை காப்பாத்தத்தான் செய்வார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + nine =

*