ஊடகவியலாளர் நிமலராஜனின் 20 ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!! (படங்கள்)
ஊடகவியலாளர் நிமலராஜனின் 20 ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பட்டத்தில் அதன் அலுவலகத்தில் இந் நிகழ்வு சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் பொ.மணிக்கவாசகம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் நிமலராஜன் உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”