;
Athirady Tamil News

யாழ்.ஏழாலையில் 53 இளைஞர்கள் உயிர்க்கொடை!! (வீடியோ, படங்கள்)

0

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண நிலைமை காரணமாக யாழ்.குடாநாட்டில் நிலவும் இரத்த தட்டுப்பாடு நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினரும், சூராவத்தை இளைஞர்களும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை-09 மணி முதல் ஏழாலை தெற்கிலுள்ள தனியார் கட்டடமொன்றில் இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கமைய நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில் ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினைச் சேர்ந்த இளைஞர்கள், சூராவத்தை இளைஞர்கள், ஏழாலை மற்றும் அயற்கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என 53 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் தலைமையிலான நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

பல்வேறு சமூகப் பணிகள் ஆற்றி வரும் ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினர் இதுவரை ஒன்பது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளனர்.

தற்போதைய கொரோனா அசாதாரண சூழ்நிலையில் பொதுவிடங்களில் நடமாடும் இரத்ததான முகாம்களை நடாத்துவதற்கும் உரிய அனுமதிகள் பெறப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. எனினும், மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையை மனதிற் கொண்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினரால் உரிய அனுமதிகள் பெறப்பட்டு சூராவத்தை வாழ் இளைஞர்களையும் ஒன்றிணைத்து குறித்த இரத்ததான முகாமை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி இரத்ததான முகாம் தொடர்பில் ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் அ. ஹிமால் தெரிவித்த கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − five =

*