;
Athirady Tamil News

செட்டிக்குளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி!! (படங்கள்)

0

வவுனியா செட்டிக்குளம் மணியர்குளத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு தமிழ் மக்கள் நிலம் அமைப்பினரால் இன்று (19) வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது கணவனை இழந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக பல் பொருள் அங்காடி ஒன்று திறந்து கையளிக்கப்பட்டது.
தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோதரன் தலைமையில் ஒரு இலட்சம் ரூபா புலம்பெயர் நிதியினூடாக குறித்த பல் பொருள் அங்காடி திறந்து கையளிக்கப்பட்டது.

இந்நிதியானது புலோலி வடக்கு பருத்தித்துறையை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா கிருஸ்ணகாந்தன், நாகராசா மதனகாந்தன், சிவநேசன் நந்தகோபாலன், இராமேஸ்வரன் அங்கனன், தாவடி கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ்லந்தை வசிப்பிடமாகக் கொண்ட யோகலிங்கம் வசந்தன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த குடும்பத்தில் சிறுவர்கள் பாடசாலை செல்வதற்கு கனடாவைச் சேர்ந்த கிரிஜா பாபாஜி ஆன்மீக மையத்தின் நிதிப்பங்களிப்புடன் துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

All-focus

All-focus
All-focus
All-focus
You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*