;
Athirady Tamil News

வவுனியா திருநாவற்குளத்தில் வீதி புனரமைப்பு!!! (படங்கள்)

0

வவுனியா திருநாவற்குளத்தில் மக்கள் பயன்படுத்த முடியாதவகையில் அமைந்துள்ள மோசமான வீதிகள் நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டிபன் தலைமையில் இன்று (19) செப்பனிடப்பட்டது.
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் பல வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாதவகையில் மோசமாக கணப்படுகின்றது. அவ்வீதிகளை வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ் காண்டீபன் நகரசபையின் அனுசரணையுடன் செப்பனிட்டு வருகிறார்.

அந்தவகையில் மோசமான வீதிகளுக்கு மக்கி பயன்படுத்தபட்டு வீதிகள் செப்பனிடப்படும் பணி நடைபெற்று வருகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், வவுனியா நகரத்தை அண்டியுள்ள மிகப்பெரிய கிராமமான திருநாவற்குளம் அதிக அபிவிருத்தி பணிகள் தேவையுடைய ஒரு வட்டாரமாக காணப்படுகின்றது.

அத்துடன் எனது வட்டாரமாகிய திருநாவற்குளத்தில் பல வீதிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் மழை காலமும் நெருங்கி வருவதால் போக்குவரத்து செய்ய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எனது சொந்த முயற்சியால் வீதிகள் செப்பனிடும் பணியை ஆரம்பித்துள்ளேன் 2022 இல் திருநாவற்குளத்தில் சகல வீதிகளும் செப்பனிடப்படும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 7 =

*