;
Athirady Tamil News

மினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது; கரு ஜயசூரிய!!

0

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறாகும். ஏனெனில், அது வரப்போகின்ற ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிப்பதாகவே அமைகின்றது.

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கரு ஜயசூரிய பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஏனைய நோய்களைப் போன்று கொரோனா வைரஸ் தொற்றிடமிருந்து எம்மால் விலகி ஓடமுடியாது. எனினும், நாட்டை மேலும் பலவீனப்படுத்தக் கூடியவாறான மற்றொரு முடக்கத்தைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் தற்போதைய நிலைவரத்துடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனிமைப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் விடயங்கள் உயர் முக்கியத்துவத்துடன் பின்பற்றப்பட வேண்டும். அவை பலவீனமானவர்களை அடக்குவதற்கோ அல்லது அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கோ பயன்படுத்தப்படாமல், அனைவருக்கும் பொதுவானதும் நியாயமானதுமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று தற்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். எனவே, அனைவரும் தாம்வைரஸ் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதற்கும் தம்மால் பிறருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கும் உரிய அனைத்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறானது. அது ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிக்கின்றது” என்றுள்ளது.

கொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!!

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் – பிரதேச மக்கள் மகஜர்!! (படங்கள்)

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*