;
Athirady Tamil News

துணுக்காய் கல்வி வலயத்தில் 224 ஆசிரிய வெற்றிடங்கள்!!

0

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் தவிர ஏனைய 48 பாடசாலைகளும் எதுவித போக்குவரத்து வசதிகளும் அற்ற பாடசாலைகளாக காணப்படுவதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் மாத்திரமே போக்குவரத்து வசதிகளைக்கொண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன.

ஏனைய 48 பாடசாலைகளுக்கும் எந்தவித பொதுப் போக்குவரத்துக்களுமற்ற பாடசாலைகளாக காணப்படுகின்றன.

இதனால் தூரப் பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு போக்குவரத்துக்கள் இல்லாத பகுதி பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைக் கொண்டு சேர்ப்பதிலும் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் வலயக் கல்வி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வலயத்தின் கீழ் 224 ஆசிரியகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதுடன் 30 பாடசாலைகளில் மாத்திரமே அதிபர்கள் உள்ளனர். ஏனைய பாடசாலைகள் அதிபர்கள் இல்லாத நிலையில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத 48 பாடசாலைகளிலும் கல்வி கற்றுவரும் மாணவர்களின் 90 வீதமான பெற்றோர்கள் தினக்கூலி செய்யும் வருமானமற்ற குடும்பங்களாகவும் 10 வீதமானவர்களே விவசாயிகளாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த மாணவர்களின் கல்வி தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறை காட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + nine =

*