;
Athirady Tamil News

தேசிய ரீதியாக திட்டமிட்டே சாவகச்சேரியில் அதிக தனிமைப்படுத்தல் முகாங்கள் அமைப்பு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலை சமூகத் தொற்றாக மாற முன்னர் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தொற்று ஒட்டுமொத்த நாட்டையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எமது பகுதியில் பாரிய தொற்றாக இல்லாவிடினும் பல்வேறு வகையிலும் மக்களின் வாழ்வியலைச் சிதைத்துள்ளது.

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கையில் கொரோனா இறப்பு வீதம் ஓர் ஆறுதல் தரும் விடயமாக உள்ள போதிலும் நாம் ஒவ்வொருவரும் மிக அவதானமாக இருக்க வேண்டும். மக்கள் சேவை நிறுவனம் என்ற வகையில் எமது பிரதேச சபைக்கும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.

பிரதேச சபை சார்பாக சகல வட்டாரங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு மீண்டும் முடக்கப்பட்டால் எமது பிரதேச மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை உணவுக்கு கூட அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேசிய ரீதியாக திட்டமிடப்பட்டு எமது பகுதிகளில் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + sixteen =

*