;
Athirady Tamil News

சக இராணுவ சிப்பாய்க்கு காதை பொத்தி அடித்த சார்ஜன்ட்!!

0

சக இராணுவ அதிகாரி சிப்பாய்க்கு காதை பொத்தி அடித்ததால், காது சவ்வு கிழிந்த நிலையில் இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அதிகாரி (சார்ஜன்ட்) மீது இராணுவ சிப்பாய் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ அதிகாரி (சார்ஜன்ட்) ஒருவர் தனக்கு கீழ் பணியாற்றும் சக இராணுவ சிப்பாய்க்கு காலை வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது சிப்பாயின் மேலான அதிகாரி குறித்த வேலைசெய்ய வருமாறு அழைத்த போது இராணுவ சிப்பாய் செல்ல மறுத்துள்ள காரணத்தினால், சார்ஜனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. உடனே இராணுவ சிப்பாய்க்கு காதை பொத்தி அடித்துள்ளார்.

காதைப் பொத்தி அடித்த போது அவரின் காது சவ்வு வெடித்ததினால் இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 9 =

*