;
Athirady Tamil News

சளிக்கு மருந்தாகும் தூதுவளை!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தூதுவளையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

வேலி, வயல்வெளி ஓரங்களில் காணப்படுவது தூதுவளை. அதிக முட்களை கொண்ட இது அற்புதமான மருந்தாக விளங்குகிறது. கத்திரி வண்ண பூக்களை உடையது. இதன் கனி சிவந்து இருக்கும். அன்றாடம் பயன்படுத்த கூடிய மூலிகைகளில் இதுவும் ஒன்று. ஆயுளை வளர்க்கிறது. நுரையீரல் நோய்களை போக்குகிறது. ஆசனவாயில் வரும் புற்றை தடுக்கும். எலும்புகளுக்கு பலம் தருகிறது. ஆஸ்மாவுக்கு மருந்தாகிறது. நெஞ்சக சளியை நீக்கி இருமலை சரிசெய்கிறது. ஈரலுக்கு பலம் தருகிறது.

தூதுவளை இலையை பயன்படுத்தி சளி, இருமல், மூக்கடைப்புக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை இலை, நெய், சீரகம், மிளகு, மஞ்சள், உப்பு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய்விடவும். நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் தூதுவளை இலை பசையை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து நெய்யில் வதக்கவும். இதனுடன் சிறிது சீரகம், மிளகுப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். சளி, இருமல், காய்ச்சல், மூச்சிரைப்பு இருக்கும்போது இந்த தேனீரை எடுக்கலாம். பெரியவர்களுக்கு 50 மில்லி, குழந்தைகளுக்கு 20 மில்லி அளவு கொடுக்கலாம்.

டலுக்கு பலம் கொடுக்கும் தன்மை கொண்ட தூதுவளை, ஆஸ்துமாவை சரிசெய்கிறது. சளியை கரைப்பதுடன் இருமலை அடக்குகிறது. வயிற்று கோளாறுகளை போக்குகிறது. பசியை தூண்டுகிறது. உஷ்ணத்தை சமன்படுத்தும். இதை அளவாக பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தூதுவளை பூக்களை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தூதுவளை பூக்கள், நெய், பனங்கற்கண்டு, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய்விடவும். இதனுடன் தூதுவளை பூக்கள், மொட்டுக்களை போட்டு வதக்கவும். பனங்கற்கண்டு கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். பூக்கள் வெந்ததும் காய்ச்சிய பால் சேர்க்கவும். தினமும் இதை குடித்துவர ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டு தன்மையை போக்குகிறது.

தூதுவளை இலையை பயன்படுத்தி வறண்ட சருமம், சிரங்குக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் விடவும். அரைத்து வைத்திருக்கும் தூதுவளை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுக்கவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்தும் போது, தோல் நோய்கள் குணமாகிறது. ஆறாத புண்களை ஆற்றும். நுண்கிருமிகளை அழிக்கும். வறண்ட சருமம், சிரங்கு குணமாகும். தூதுவளை ஒவ்வாமை நோய்களுக்கு மருந்தாகிறது. இதை அன்றாடம் பயன்படுத்தி வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்பாதத்தில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வல்லாரை சாறு எடுத்து நெய் அல்லது எண்ணெயில் இட்டு காய்ச்சி, பித்த வெடிப்புகளின் மேல் பூசிவர வெடிப்பு நீங்கி, பாதம் அழகாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 5 =

*