;
Athirady Tamil News

விடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை தெரிவிப்பு!!

0

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு உதவுகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
21 திகதி பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான ஆணைக்குழு வெளியிட்ட தீர்ப்பு குறித்து அறிந்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பில்லை இலங்கை அரசாங்க நேரடியாக தனதுநிலைப்பாடுகளை முன்வைக்க முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் பிரிட்டனிற்கு உதவுகின்றது என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வரும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் எஞ்சியிருப்பவர்களும் அந்த அமைப்பின் பயங்கரவாத கொள்கையுடன் தொடர்புடையவர்களும் வெளிநாடுகளில் இலங்கையில் வன்முறையை தூண்டவும் நாட்டை ஸ்திரமிழக்க செய்யவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை முடிவு தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு!! (வீடியோ, படங்கள்)

விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கோரி அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிநிதிகளிடம் கோரிக்கை..!!(படங்கள்)

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது – ஆளுநர்!!

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை..!!

5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி – தீர்ப்பாயம் உத்தரவு..!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 9 =

*