;
Athirady Tamil News

என்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா? (வீடியோ, படங்கள்)

0

வயசானவர் vs பொண்ணு என இன்றைய 2வது புரமோ மற்றும் 3வது புரமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல காரசாரமான விவாதத்தை அதிகரிக்கச் செய்து விட்டது.

இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, வெளிய வாடா என திட்டிய நிலையில், மூன்றாவது புரமோவில், பிக் பாஸிடம் முறையிடுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கன்ஃபெஷன் ரூமுக்கு சென்ற அவர், அங்கே கதறி கதறி அழும் புரமோ வைரலாகி வருகிறது.

வில்லாதி வில்லன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷுக்கு பதிலாக நடிகரும் சமையல் கலை வல்லுநருமான சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொண்ட போது, இவரெல்லாம் எங்கே இருந்து கேம் விளையாடப் போகிறார். இதற்கு முன்னதாக வந்த வயதானவர்கள் போல, முதல் வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறிடுவார் என பார்த்தால், எல்லோரையும் மிரட்டி உருட்டி வில்லாதி வில்லனாக கலக்குகிறார்.
ஓப்பனா சொல்லியே ஆடுறாரு

நல்ல பிளாட் வாங்க நல்லா எடை போடுங்க.. 24 முதல் 26ம் தேதி வரை புக்கிங் மேளா.. வாங்க வாங்க!
ஓப்பனா சொல்லியே ஆடுறாரு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையை மூட்ட வேண்டியே தான் கொளுத்திப் போட்டு வருவதாகவும், அப்பொதான் சுவாரஸ்யமா நிகழ்ச்சி நகரும் என்றும் கமல் முன்னாடியே சொல்லி பெயர் எடுத்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கின் போது, ஆஜீத்தை மட்டம் தட்டியதை பார்த்து பலரும் சுரேஷை கழுவி ஊற்றினர்.

சூப்பர் ஹீரோ

வில்லனாக இருந்து வந்த சுரேஷ் சக்கரவர்த்தி அனிதா சம்பத்துடன் இணைந்து நடனம் ஆடியது மற்றும், யாருமே கேபிக்கு ஹெல்ப் பண்ணாத போது, கேபியை இந்த வயதிலும் தூக்கி சுமந்து, தோத்தாலும் பரவாயில்லை என உடம்பு வலிக்க மொட்டை சுரேஷ் பண்ணதை பார்த்த எல்லோரும் அவரை சூப்பர் ஹீரோவாக ஆக்கினர்.

கமல் நம்பவில்லை

ஆனால், வார இறுதி நாட்களில் கமல் வந்த உடனே, சுரேஷ் சக்கரவர்த்தி கேபிக்கு செய்த உதவியை பாராட்டாமல் மற்ற விஷயங்களில் தான் அக்கறை செலுத்தினார். ஞாயிறன்று அதுபற்றி ஒருவார்த்தை மட்டுமே பேசும் போது கூட, தெரியாத்தனமா உள்ளே இருக்கும் நல்ல குணம் வந்துவிட்டது என்றே கலாய்த்தார்.

3வது புரமோ

2வது புரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தி சனம் ஷெட்டியின் நெற்றியில் இடித்த காரணத்தினால், சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியே வாடா என வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசிய நிலையில், மூன்றாவது புரமோவில், கன்ஃபெஷன் ரூமுக்கு செல்லும் சுரேஷ் சக்கரவர்த்தி, அங்கே மனம் வெம்பி அழுகிறார்.

தெரிஞ்சு பண்ணீங்களா

பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க பிக் பாஸ் என சுரேஷ் கேட்டதும், கன்ஃபெஷன் ரூமுக்கு பிக் பாஸ் அழைத்தார். சுரேஷ் தெரிஞ்சு பண்ணீங்களா என கேட்டதற்கு, இல்லை பிக் பாஸ்.. எந்த காரணம் கொண்டும் செய்யல, செஞ்சிருந்தா.. நேரா அடிச்சிருப்பேன்னு சொல்ல வந்த சுரேஷ், அப்படியே அழத் தொடங்கினார்.

கார்னர் பண்றாங்க

பிக் பாஸ் வீட்டில் இதுவரை ஒவ்வொருத்தரையும் கார்னர் பண்ணது, வச்சு செய்தது என எல்லா வேலையும் செய்து விட்டு, அரக்கன் டாஸ்க் கொடுத்த போது, பேன்ட் கழண்டு விழுவது குட தெரியாத அளவுக்கு ஆட்டம் போட்ட சுரேஷ், இப்போ தன்னை எல்லாரும் வச்சி கார்னர் பண்றாங்க பிக் பாஸ் என கதறி கதறி அழுகிறார்.

ரொம்ப இம்மெச்சூர்ட்

எந்த வம்புக்கும் தும்புக்கும் போகாம பின்னாடியே இருந்தேன். ஆனால், இன்னைக்கு பண்ணது ரொம்ப இம்மெச்சூர்ட் என சொல்லி வெடித்து பொங்கி அழுத சுரேஷ் சக்கரவர்த்தியை பார்க்கவே பாவமத்தான் இருக்கு என்றாலும், இந்த வாரம் எவிக்‌ஷனில் இருப்பதால், எஸ்கேப் ஆக இதுவும் அவர் போடும் கேம் பிளானா? என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − one =

*