;
Athirady Tamil News

ஒரே வாய்ப்பு.. கடைசி வாய்ப்பு.. பயன்படுத்துமா சிஎஸ்கே? நல்லா தேவைதான் என்கிறார்கள் ரசிகர்கள்!! (படங்கள்)

0

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு பிறகு, மறுபடியும் மும்பை அணியை இன்று சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும்தான் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது நிச்சயம் கிடையாது. அது அடுத்த அணிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதை பொருத்தும் இருக்கிறது. கால்குலேட்டரை கையில் வைத்துக்கொண்டு கூட்டி கழித்து பார்க்கவேண்டிய கணக்கு அது.

கால்குலேட்டர் தேவையில்லை

அதேநேரம் கால்குலேட்டரோ கம்ப்யூட்டரோ இல்லாமல் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரியும். அது என்னவென்றால் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை தோல்வியடைந்தால் கண்ணை மூடிக் கொண்டு செல்லலாம்.. சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு போகவே முடியாது என்பதை. மும்பையுடன் வெற்றி பெற்றுவிட்டு இனி வரும் எந்தவொரு போட்டியிலாவது தோற்றாலும் இதுதான் கதி. கடைசி இடம் நல்ல பிளாட் வாங்க நல்லா எடை போடுங்க.. 24 முதல் 26ம் தேதி வரை புக்கிங் மேளா.. வாங்க வாங்க! கடைசி இடம் சென்னை அணி இப்படியான ஒரு மோசமான இக்கட்டில் இதற்கு முன்பு சிக்கியது கிடையாது.

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி, அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமிதங்கள் சென்னை சூப்பர் கிங்சுக்கு உண்டு. இந்த முறைதான் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது சிஎஸ்கே. கண்களை கசக்கி விட்டு பார்த்தாலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தான் இருக்கிறது என்பதால் நொந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

எப்படி போனால் என்ன

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்றைய போட்டியில் சென்னை வெல்லவேண்டும் என்று கணிசமான சென்னை ரசிகர்களே விரும்பவில்லை. இதற்கு காரணம் அணி நிர்வாகம் ரசிகர்களின் மனக்குமுறலை கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதுதான். அருமையாக விளையாடிய ஜெகதீசனை ஒரே போட்டியுடன் தூக்கி வீசிவிட்டு, டி20யில் ஒன்றுக்கும் உதவாத கேதார் ஜாதவ்வை கட்டிக்கொண்டு அலைகிறது சிஎஸ்கே. இருப்பதிலேயே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கடுப்பு இதுதான்.

தாஹீர் எங்கே?

கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார் தாஹிர். அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆல்ரவுண்டர் என்பதற்காக ப்ராவோவுக்கு வாய்ப்பை கொடுக்கிறது சிஎஸ்கே. ஆனால் பிராவோ தனது பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பைக் கொடுத்தது தான் மிகப்பெரிய வேதனை. ஹஸில்வுட் மிகச் சிறப்பான வேகப்பந்துவீச்சாளர் தான். மாற்று கருத்து கிடையாது. ஆனால் நடப்பு தொடரில் அவருக்கு எப்போதாவதுதான் சிஎஸ்கே சாங்ஸ் கொடுக்கிறது. அதிலும் அவர் அதிக அளவுக்கு விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ரன்னை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறார். எனவே அவருக்கு பதிலாக ஒரு போட்டியிலாவது தாகீருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அதையும் செய்யவில்லை.

ரசிகர்களுக்குத்தான் டென்ஷன்

சிஎஸ்கே நிர்வாகத்துக்கு ரசிகர்கள் டுவிட்டரில் மென்ஷன் செய்து தங்களது கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் எதையும் மதிப்பதாக தெரியவில்லை சிஎஸ்கே நிர்வாகம். இதனால்தான் கடுப்பாகிப் போன ரசிகர்கள் இனி சிஎஸ்கே ஜெயித்தால் என்ன, தோற்றால் என்ன என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். ஏனெனில் மும்பையுடன் சிஎஸ்கே வெற்றி பெற்றால் இனி ஒவ்வொரு போட்டியிடும் அது வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அந்த எதிர்பார்ப்பை சென்னை பூர்த்தி செய்யப் போவது கிடையாது என்ற விரக்தி மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

பழைய சிஎஸ்கே

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அணி வீரர்களை விட நாம் தான் அதிகமாக டென்ஷன் ஆகி விடுகிறோம். எனவே இவர்கள் எப்படி போனால் என்ன என்று சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருவதை பார்க்க முடிகிறது. இப்போது பிளே ஆப் சென்றால் பழையபடி அதே தவறைத்தான் சிஎஸ்கே செய்யும். மோசமாக தோல்வியடைந்து நாடு திரும்பினால் தான் அடுத்த சீசனில் இருந்து தனது தவறை திருத்திக்கொண்டு பழைய சிஎஸ்கே அணியாக திரும்பும் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த முறை நன்கு ஆடும் ஒரு அணி.. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்த ஒரு அணி.. வெற்றி பெறட்டுமே என்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். அவர்கள் சொல்வதும் நியாயம் தானே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.