;
Athirady Tamil News

“என்மேல இருந்து கைய எடு”.. ஓவர்நைட்டில் புலிக்குட்டி ஒன்று பூனைக்குட்டி ஆன கதை.. மிரண்ட ரசிகர்கள்!! (வீடியோ, படங்கள்)

0

ஓவர் நைட்டில் பிக்பாஸ் வீட்டில் எல்லாமே தலைகீழான சமாச்சாரம் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. நேற்றைய எபிசோட் அந்த அளவுக்கு ரீச் ஆகி இருந்ததே அதற்கு காரணம்! பிக்பாஸ் வீட்டில் 2 நாளாக புது டாஸ்க் நடந்தது.. அரக்கர் உலகம் vs ராஜா வீடு.. இவர்களுக்குள்தான் போட்டி.. பெல் அடிக்கும்வரை அரக்கர் கூட்டம் என்ன செய்தாலும் ஆடாமல் அசையாமல் ராஜா வீடு இருக்க வேண்டும். அசைந்துவிட்டால் அவரும் அரக்கர் கூட்டத்தில் ஒரு ஆளாக சேர்க்கப்பட்டுவிடுவார்.. இதுவே அந்த டாஸ்க். அப்படித்தான் எல்லாருமே உருமாறினார்கள்.. புது கெட்டப்பில் எல்லாரையும் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.. அதேபோல, பெரும்பாலும் இவர்கள் நடிப்பில் தொடர்பில் உடையவர்கள் என்பதால், இந்த டாஸ்க் அவர்களுக்கு புதுசாகவே தெரியவில்லை.. எல்லாருமே சிறப்பாக நடித்தார்கள்.

புது டாஸ்க்

தாடி மீசை இல்லாத ரியோ, மகாராணி கெட்டப்பில் நிஷா, மொட்டை தலையில் திடீரென விக் வைத்து ஆளே மாறி போன சுரேஷ் என அனைவருமே வித்தியாச தோற்றத்தில் தெரிந்தனர். சுரேஷ் மட்டும் அடிக்கடி கேமரா முன்னாடி வந்து வந்து நின்று மிரட்டி கொண்டிருந்தார். ஹைலைட் ஹைலைட் நேற்றுமுன்தினம் நடந்த டாஸ்க்கை விட நேற்று சற்று ஓவர் டோஸ்.. அதிலும் சுரேஷ்தான் ஹைலைட்.. யார் எங்கே என்ன டாஸ்க் செய்து கொண்டிருந்தாலும், கரெக்ட்டாக கேமரா முன்னாடி ஓடி ஓடி வந்து எதையோ புறணி பேசி கொண்டே இருந்தார்.. அதேபோல, ஆரியும் பல நேரங்களில் தன்னிலை மறந்துவிடுகிறார்.

வார்த்தைகள்

இவர் மட்டும் எல்லாரையும் எதுவானாலும் சொல்லலாம், செய்யலாம், ஆனால், தன்னை மட்டும் எதுவும் யாரும் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.. ரொம்ப சீரியஸாகவும் நடந்து கொள்வதுபோல தெரிகிறது.. நேற்றுகூட ஒரு கட்டத்தில், “இப்படி விளையாடறதுக்கு வேற ஏதாச்சும் செய்யலாம்” என்ற எல்லைமீறிய வார்த்தைகள் சற்று அதிர்ச்சியையே தந்தன. ஆரி, அனிதா ஆரி, அனிதா ஆனால், சுரேஷ், ஆரி போலவே அனிதாவும் எதையோ கத்தி கொண்டே இருக்கிறார்.. ஆனாலும் ஒன்னும் எடுபடவில்லை.. அதாவது முன்புபோல யாருமே அனிதாவை கண்டுகொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வீரம் கொப்பளிக்கும் வசனங்கள் என்ற பெயரில் எதைஎதையோ சத்தமாக அவராகவே பேசி கொண்டிருந்தார். கையை எடுங்க கையை எடுங்க நேற்றுமுன்தினமே சுரேஷ் சற்று எல்லை மீறியே விளையாடிவிட்டார்.. பாலாஜிக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் வாக்குவாதம் ஒன்று வந்துவிட, அப்போது, பாலாஜி மீது கையை வைத்து, சுரேஷ் எதையோ சொல்ல முயல, “என் மேல இருந்து கைய எடுங்க” என்று பாலாஜி ஆவேசமாக பேசிய போதே சுரேஷ் அடங்கி இருந்திருக்கலாம்.

உறுத்தல்

ஆனால் நேற்று, சனம் நெற்றியில் சுரேஷ் அடித்துவிடவும், அதுதான் விளையாட்டின் போக்கை சீரியஸாக மாற்றிவிட்டது.. “வாடா… வாடா, வெளியே வாடா” என்று சிங்கிள் வார்த்தையில் சுரேஷை டேமேஜ் செய்தார்.. ஒப்புக்கு போய் சனத்திடம் சுரேஷ் ஸாரி கேட்டாலும், அவருக்கு ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.. கன்ஃபெக்‌ஷன் ரூம்க்குள் உட்கார்ந்து சின்ன குழந்தைங்க போல தேம்பி தேம்பி அழுத சுரேஷை கண்டு பிக்பாஸ் ரசிகர்கள் மிரட்சியுடன் பார்த்தனர்.

அழுகை

“நானும் ரவுடிதான், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்” என்று இத்தனை நாளாக கெத்து காட்டி கொண்டிருந்த சுரேஷின் இமேஜ் ஓவர் நைட்டில் மளமளவென சரிந்துவிட்டது. வாய்துடுக்குத்தனம் எந்த அளவுக்கு கொண்டு போய்விட்டுவிடும் என்பதை சுரேஷ் இனியாவது புரிந்திருப்பார் என்றே நம்பலாம்!


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 6 =

*