;
Athirady Tamil News

மூட்டுவலியை போக்கும் கல்யாண முருங்கை!! (மருத்துவம்)

0

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும், மூட்டுவலியை போக்கவல்லதும், பித்தத்தை சமன்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை தூண்ட கூடியதுமான கல்யாண முருங்கையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.சாலையோரங்களில், இல்லத்தில் இருக்கும் மூலிகை கல்யாண முருங்கை. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இதற்கு முள் முருங்கை என்ற பெயரும் உண்டு. இது, மாதவிலக்கை தூண்ட கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால்பெருக்கியாக விளங்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் கல்யாண முருங்கை மலச்சிக்கலை போக்குகிறது. உடலில் பித்தம் அதிகமாவதை தடுக்கிறது. பித்தத்தை சமன்படுத்துகிறது.

கல்யாண முருங்கை மரப்பட்டையை பயன்படுத்தி காய்ச்சல், மூட்டுவலியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கல்யாண முருங்கை மரப்பட்டை, சீரகம், மிளகு. செய்முறை: கல்யாண முருங்கையின் மரப்பட்டை துண்டுகளை நசுக்கி எடுக்கவும். இதனுடன் சீரகம், மிளகு தட்டிப்போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில், 50 மில்லி அளவுக்கு குடித்துவர உடலில் ஏற்படும் வலியை போக்கும். காய்ச்சலை தணிக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்குகிறது. வலி நிவாரணியாக பயன்படுகிறது. வீக்கத்தை வற்ற செய்கிறது. வாதத்தை அடக்க கூடியதாக விளங்குகிறது.

கல்யாண முருங்கை இலைகளை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கல்யாண முருங்கை இலை, சீரகம், மரமஞ்சள்.செய்முறை: கல்யாண முருங்கை இலைகளை பசையாக அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுக்கவும். இதில், 20 மிளகு தட்டிபோடவும். சிறிது சீரகம், அரை ஸ்பூன் மரமஞ்சள் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் காலை 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கை தூண்டும். உடல்
எடை குறையும். வயிற்றில் உள்ள பூச்சிக்களை வெளியேற்றும். மாதவிலக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருந்தாகிறது.

கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி வலி நிவாரணி தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கல்யாண முருங்கை இலைகள், நல்லெண்ணெய், எலுமிச்சை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் கல்யாண முருங்கை இலை பசை, சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடித்து வைத்துக்கொண்டு மேல்பூச்சு மருந்தாக பயன்படுத்தி வர வீக்கத்தை கரைக்கும். வலியை தணிக்கும்.ஆழ்ந்த தூக்கத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் சாதிக்காயை பொடித்து அரை ஸ்பூன் எடுக்கவும். இதை நீரில் இட்டு காய்ச்சி, தேன் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து குடித்துவர தூக்கம் நன்றாக வரும். தூக்கமின்மை சரியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − six =

*