;
Athirady Tamil News

ஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு? (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் வீடு ஒரு போட்டி களம் தான் என்றும் இது ஆனந்தமான வீடு இல்லை என பேசிய பாலாஜியை அவர் பேசுன பேச்ச வச்சே மடக்கி ஸ்கோர் பண்ணிட்டாரு நம்ம ஜித்தன் ரமேஷ்.

போடா வாடான்னு தாத்தாவ பேசிட்டு, சனம் ஷெட்டி பேசினதை மட்டும் குத்தம் சொல்றியா என்றும் கேட்டு நல்லாவே பாலாஜியை நோஸ் கட் பண்ணிட்டாரு.
பட்டிமன்றம் டாஸ்க்கில் இந்த போர்ஷன் தான் பா ஷார்ட்டா இருந்தாலும், நச்சுன்னு இருந்துச்சு என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சண்டை வருமா

பாலாஜி முருகதாஸ் பேசியதை புரமோவிலே வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷின் காட்சிகளை பார்த்ததும், நிச்சயம் பாலாஜிக்கும், ஜித்தன் ரமேஷுக்கும் சண்டை முட்டிக்கும், இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பாலாஜி பத்தி ரமேஷ் பேசியதே வேற..

பாசக்கார பய பாலாஜி

இந்த பிக் பாஸ் வீடு ஒரு போட்டிக் களம் என பேசிய பாலாஜியை பார்த்து, அப்படி இல்லை தம்பி இது ஒரு பாசக்கார வீடு, அண்ணன் நான் சொல்றேன் நம்பு என ஜித்தன் ரமேஷ் பேச ஆரம்பித்ததும், என்னடா புரமோவுக்கும் நிகழ்ச்சிக்கும் வழக்கம் போல சம்பந்தம் இல்லாம போகுதேன்னு ரசிகர்கள் குழம்பிப் போனார்கள்.

ஆஜீத்துக்காக விட்டுக் கொடுக்க மாட்ட

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்திடம் இருந்து ஆட்டையை போட்டு நீயே வச்சிருந்திருக்கலாமே, அவனை ஏன் தம்பி, தம்பின்னு பாசத்தை கொட்டுற, அவனும் உனக்கு ஒரு போட்டியாளர் தானே.. இதுவே ஆஜீத் வெளிய போற சூழ்நிலை வந்து உன்கிட்ட எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருந்தாலும், நீ ஆஜீத்தை சேவ் பண்ணுவ என பாலாஜியை ஒரே அடியாக தூக்கி வைத்து பேச ஆரம்பித்துவிட்டார் ரமேஷ்.

அந்தர் பல்டி

அப்படியே அந்தர் பல்டி அடிக்கும் விதமாக, சனம் ஷெட்டி வாடா, போடா, அவன் இவன்னு பேசுனாங்கன்னு சொல்ற நீயே, வயசாகிடுச்சு, உனக்கு மூளையில்லையா என நேத்து கேட்கல, அதையும் நான் பார்த்துக்கிட்டுத் தான் இருந்தேன் என சட்டென்று தனது டாப்பிக்கை விட்டு, பாலாஜியை வெளுத்து வாங்கும் விதமாக பேசிய ரமேஷ், மறுபடியும் திறமையாக பாலாஜியை தூக்கி வச்சு பேசுவது போல பேசி தனது உரையை முடித்தார்.

குறுக்கிட்ட பாலாஜி

அப்ப அப்படி அவரை அசிங்கப்படுத்திட்டு, அப்புறம் சுரேஷ் தாத்தா கூடவே சகஜமா பேசுற, பழகுற, அப்போ உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு நல்ல பாண்டிங் இருக்குத் தானே என ஜித்தன் ரமேஷ் கொக்கிப் போட, சுருக்கென கோபம் வந்த பாலாஜி, குறுக்கிட்டுப் பேசினார். ஆனால், அவரை பேச விடாமல் நடுவராக அர்ச்சனா தடுத்தார். மீறி பாலாஜி பேச, பேச மார்க்குகளை குறைப்பேன் என மிரட்டி அந்த பஞ்சாயத்தை கொஞ்சம் தள்ளி வச்சிருக்காங்க..

நிறைய பேர் பேசல

பட்டிமன்றம் டாஸ்க் நடந்துகிட்டே இருக்கும் போது திடீரென பாதி பேர் பேசுனதை எடிட்டர் வெட்டித் தூக்கி எறிந்து விட்டார். ஷிவானி, சனம் ஷெட்டியெல்லாம் அந்த அளவுக்கு மொக்கையா பேசுனாங்களான்னு தெரியலையே.. இல்லை நாளைக்கு பேசுவாங்களான்னு புரியல, அதுக்குள்ள கோவில் திருவிழாவில் விளையாடுற மியூசிக்கல் சார் கேமுக்கு போயிட்டாங்க.. வாட் இஸ் திஸ் பிக்பாஸ்?


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*