தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!

நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கம்பஹா மாவட்டம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பகுதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு வருகை தருவோர் தொடர்பான தகவல்களை 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!