வவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்!! (படங்கள்)
வவுனியா திருநாவற்களம் யங் லைன் விளையாட்டு கழகத்தின் வருடாந்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப் போட்டிகள் இன்று (25) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வவுனியா திருநாவற்குளம் மாணிக்கதாசன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வினோ பிரகாஷ் தலைமையில் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து கொண்டு நாணய சுழற்சி முறையில் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் 8 ஓவர்கள் கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளன.
கிறிக்கெற் ஆரம்ப நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உறுப்பினர்களுடன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”