;
Athirady Tamil News

மன்னாரில் 11 பேருக்கு கொரோனா தொற்று;கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த பஸ் பயணிகளுக்கு அவசர அழைப்பு!!

0

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று (27) வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தனி ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும், பேலிய கொடை மீன் தொகுதி கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த போக்குவரத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா டிரவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தான எச்.எஸ்.ரவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.

குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில் இருந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை!!

தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!

சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!

நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் இரத்து!!

பேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்; கந்தக்காட்டுக்கு அனுப்பப்படுவார்!!

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!

மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா!!

தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!

கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி!!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!!

மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*