;
Athirady Tamil News

வவுனியா பட்டானிச்ச10று வீதி புனரமைப்பு!!! (படங்கள்)

0

வவுனியா பட்டானிச்சூறு வீதி புனரமைக்கும் நடவடிக்கை நகரசபை உறுப்பினர்களான முகமட் பாரி மற்றும் எ.எல்எம். லறிப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா நகரசபையின் உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பட்டானிச்சூர் மூன்றாம் ஒழங்கை வீதி புனரமைக்கப்பட்டது.

பட்டானிச்சூர் நகரசபை உறுப்பினர்களின் முயற்சியின் காரணமாக 1.5 மில்லியன் ரூபா செலவில், நகரசபையின் ஒத்துழைப்புடனும் வீதி புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர்கள், மழை காலத்தில் நீர் தேங்கி பயன்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது. இப்போது இவ் வீதியானது செப்பனிடப்பட்டுள்ளது. அதே போன்று பட்டானிச்சூறு இரண்டாம் வட்டாரத்தில் அனைத்து வீதிகளும் மற்றும் வடிகாலமைப்பு போன்றன எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் சீர் செய்யப்படும் அத்துடன் எதிர்காலத்தில் இவ்வீதி காபற் விதியாக மாற்றப்படும் என தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*