;
Athirady Tamil News

மறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை – மணீஷ் சிசோடியா..!!

0

டெல்லியில், அக்டோபர் 31-ந் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்டோம். ஆனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + ten =

*