;
Athirady Tamil News

யார் சொன்னா ஷிவானி மிங்கிள் ஆகலைன்னு.. பாலாஜி கூட ரொம்பவே.. கேபி, சனம்க்கு அப்படி எரியுது! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் எல்லாருமே அங்கிள் மற்றும் ஆன்டிகளாக இருக்காங்களே, இந்த சீசனில் லவ் டிராக் இல்லையா என ரசிகர்கள் ஏங்கி தவித்து வந்த நிலையில், தற்போது புதுசா ஒரு காதல் இந்த சீசன்லையும் பூத்து வருகிறது.

கேபிக்கும், பாலாவுக்கும் பிக் பாஸ் எடிட்டர் லவ் தீம்லாம் போட்டு கோர்த்து விட பார்த்தாரு ஆனால், தங்கச்சின்னு சொல்லி பாலாஜி கதையை மாத்திட்டாரு..

சனம் ஷெட்டி பாலாவை உருகி உருகி ஒன் சைடா லவ் பண்றாங்க.. ஆனால், அவங்களும் சின்ன பொண்ணு இல்லை என பாலா போட்டு உடைத்து விட்டார்.

க்ளோஸ் அப்ல

என்ன அழகு ஷிவானி நாராயணன் கிட்ட கண்டிப்பா பெண்கள் மேக்கப் டிப்ஸ் கேப்பாங்க போல, அந்த அளவுக்கு ஃபங்ஷன் மோடுன்னு வந்துட்டா மட்டும் அழகா சேலை கட்டிக்கிட்டு சிலையாட்டம் ஆகிடுறாங்க, கையில இருக்கிற கொலு பொம்மைக்கு பெயின்ட் பண்றதுக்கு முன்னாடி அவங்க அவங்கள நல்லா பெயின்ட் பண்ணிட்டு வந்துட்டாங்க..

ஸ்ட்ராப் வச்ச ஜாக்கெட்

அதிலும், ஒன் சைடு ஸ்ட்ராப் வச்ச ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு பேரழகாவும் கவர்ச்சி சிலையாகவும் இருந்த ஷிவானி தான் பிக் பாஸ் வீட்டின் விஜயதசமி ஸ்பெஷலே! நெத்தியில சின்னதா விபூதி, குங்கும பொட்டு வச்சிக்கிட்டு அப்படியே சர்வ லட்சணமாக ஷிவானி உட்கார்ந்திருக்க, அவர் பக்கத்திலேயே பாலாஜியும் வந்து உட்கார்ந்து விட்டார்.

சிங்கிள் இப்போ மிங்கிள் ஆயாச்சு

ஷிவானி எப்பவுமே சிங்கிளா இருக்காங்க, யார் கூடவும் மிங்கிள் ஆக மாட்றாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, அவர் தனியா ஒரு டிராக்ல பாலாஜி முருகதாஸ் கூட நல்லாவே மிங்கிள் ஆகிட்டாங்க.. பிக் பாஸ் வீட்டில சூப்பரா ஒரு ரொமான்ஸ் போர்ஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு!

பாட்டுப் பாடு பாலா

பிக் பாஸ் வீட்டில ஸ்பீக்கரே தேவையில்லாமல், எந்நேரமும் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிற வேல்முருகன், சின்ன பாபி சிம்ஹா ஆஜீத்தை எல்லாம் விட்டுப் புட்டு, பாலாஜி முருகதாஸை பார்த்து, சத்தமே வராமல் மத்த யாருக்கும் கேட்டு விடக் கூடாது என லோ டோன்ல கொஞ்சிப் பேசி, எனக்காக ஒரு பாட்டுப் பாடு பாலா என ஷிவானி கேட்டதும், 2 மில்லியன் ரசிகர்களின் ஹார்ட்டும் பிரேக் ஆகிடுச்சு..

பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வு தானடி

பாலாஜியும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஷிவானி செல்லம் கேட்டுடுச்சேன்னு, கோலி சோடா படத்தில் வரும் “ஆல் யுவர் பியூட்டி.. அழகு கண்ணாடி.. ஃபைன் குவாலிட்டி.. உன் பர்சனாலிட்டி.. பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வு தானடி.. உன் பார்வையால நானும் இப்போ சூப்பர் மேனுடி” என முரட்டு குரலில் பாடுறதும், அதை ஷிவானி ரசிக்கறதும், டைனிங் டேபிளில் இருந்து மொட்டை தாத்தா, என்னடா நடக்குது அங்க என்பது போல் லுக் விடுவதும் செம ஹைலைட்.

ஜோசியர் சொல்லிட்டாரு

இந்த வீட்டுல பாலாவுக்கு ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும் என கேபி ஆஜீத்துக்கு சொன்னதும், அது ஷிவானி தான் என அப்பவே குட்டி ஜோசியர் கணிச்சு சொல்லிட்டார். அதை கேட்ட, கேபி எப்படி சொல்ற என அழுத்தியதும் எழுந்த பாலாஜி நீ என் தங்கச்சி, இந்த வீட்டுலயே என்னோட சின்ன வயசு பொண்ணு நீங்க ரெண்டு பேரும் தான் என்ற போதே ஷிவானி – பாலாஜி காதல் ஸ்டார்ட் ஆகிடுச்சு, நேற்று அதை ஷிவானியும் கன்ஃபார்ம் பண்ணிட்டார்.

சனம்க்கு ரொம்பவே எரியுமே

பாலாஜி முருகதாஸ் – ஷிவானி நாராயணன் லவ் டிராக் ஆரம்பமாகி உள்ள நிலையில், கேபிக்கும் சனம் ஷெட்டிக்கும் ரொம்பவே எரியுமே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்போதுமே பாலா.. பாலா என வழியும் சனம் ஷெட்டிக்கு இந்த மேட்டர் தெரிஞ்சா அவ்ளோதான் என்றும் சீக்கிரமே ஷிவானி, கேபி, சனம் மூன்று பேரும் முடியை புடிச்சிக்கிட்டு சண்டை போட்டாலும் போடுவாங்கன்னு கமெண்ட்டுகள் களை கட்டுகின்றன.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + eighteen =

*