;
Athirady Tamil News

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு!! (படங்கள்)

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்ட மொன்றை வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர்.
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தலைமையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர் கெகலிய ரம்புக்கல காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் சென்று முகவரி மாற்றி வசித்து வருவதாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அண்மையில் இலங்கைக்கு விஜியம் மேற்கொண்ட அமரிக்க இராஜாங்க செயலாளர் ‘மைக் பொம்பியோ’ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் தலையிட்டு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குறித்த கவயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இறுதி யுத்தம் முடிவடைந்து பதினோரு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், எமது பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படவில்லை, எனவே சர்வதே நாடுகள் ஒன்றிணைந்து காணாமல் ஆக்ககப்பட்டவர்களின் பிரச்சனைக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும், இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் தலைவர்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக தீர்வுகளை தராமல் இழுத்தடிக்கிறார்கள் அமரிக்க இராஜங்க அமைச்சரிடம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம். நாங்கள் விலங்குகளை தொலைக்கவில்லை எமது உறவுகளை தொலைத்தள்ளோம் எனவே சர்வதேசம் இதில் தலையிட்டு நீதியை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =

*