களத்தில் நடந்த மிஸ்ட்ரி.. தோனியை மிரள வைத்த தமிழக வீரர்.. 2 தடவையும் நிகழ்ந்த அதிசயம்.. பரபர சம்பவம்!! (படங்கள்)
தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இந்த சீசனில் இரண்டு முறை சிஎஸ்கே கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். 2020 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தேர்வாகி உள்ளது. நேற்று கொல்கத்தா அணியை சிஎஸ்கே வீழ்த்திய நிலையில் மும்பை பிளே ஆப் சென்றது. இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. சிஎஸ்கே அணி மோசமாக சொதப்பியதை விட கேப்டன் தோனி பேட்டிங் சொதப்பியதுதான் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதிர்ச்சி
இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே கேப்டன் தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஒரே ஒரு போட்டியில் 40+ ரன்கள் அடித்த தோனி மற்ற எல்லா போட்டியிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார். தோனியின் தொடர் சொதப்பல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏமாற்றம்
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் தோனி 4 பந்துகள் பிடித்து வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். நேற்று போட்டியிலும் கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் பவுலிங்கில் தோனி விக்கெட்டை இழந்தார்.
வெளியே போட்டார்
இரண்டு பந்துகளை அடுத்தடுத்து வெளியே வீசிய வருண் சக்ரவர்த்தி.. திடீர் என்று ஒரு பந்தை உள்ளே லெக் சைட் திசையில் வீசினார்.திடீரென உள்ளே வந்த பந்தை தோனியால் கணிக்க முடியவில்லை. சரியான லென்தில் வந்த பந்தை கணிக்க தவறிய தோனி போல்ட் ஆனார். பந்து எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாமல் தோனி அதிர்ச்சி அடைந்தார்.
திடீரென வந்தது
வெளியே செல்வது போல சென்ற பந்து திடீரென உள்ளே வந்தது. இதனால்தான் வருண் சக்ரவர்த்தியை பலரும் மிஸ்டரி ஸ்பின் பவுலர் என்று அழைக்கிறார்கள். நேற்று போட்டியிலும் இவரின் மிஸ்டரி ஸ்பின் பெரிய அளவில் பலன் கொடுத்தது. அதோடு கடந்த கொல்கத்தா vs சென்னை போட்டியிலும் இவர்தான் தோனி விக்கெட்டை எடுத்தார்.
அப்போதும்
கடந்த போட்டியிலும் தொடர்ச்சியாக பந்தை வெளியே வீசிய வருண் மூன்றாவது பந்தை உள்ளே வீசி தோனி விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் ஒரே சீசனில், ஒரே மாதிரியான பந்துகள் மூலம் வருண் சக்ரவர்த்தி தோனியின் விக்கெட்டை 2 முறை எடுத்துள்ளார். இரண்டு முறையும் தமிழக பவுலரின் வித்தையை கணிக்க முடியாமல் தோனி விக்கெட்டை இழந்துள்ளார்.