அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டார்.. நடராஜன் செய்த காரியம்.. மிரண்டு போன கோலி.. என்ன நடந்தது? (படங்கள்)
தமிழக வீரர் நடராஜன் இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதிலும் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக இவர் பவுலிங் செய்த விதம் பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதிலும் புள்ளிகள் பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடிக்க போகும் அணி எது என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே பிளே ஆப் செல்வதற்கான போட்டி நிலவி வருகிறது.
எப்படி
இந்த நிலையில் நேற்று பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய பெங்களூர் 20 ஓவரில் வெறும் 120 ரன்கள் மட்டும் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி மிக எளிதாக 14.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
வெற்றி
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதுதான் காரணம். அதிலும் ஸ்லோ பால் பிட்சை ஹைதராபாத் பவுலர்கள் சரியாக கணித்து அதற்கு ஏற்றபடி பவுலிங் செய்து உள்ளனர். நேற்று ஹோல்டரும், சந்தீப் சர்மாவும் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
விக்கெட்டுகளை எடுத்தனர்
ஆனால் நேற்று பெங்களூர் அணியின் அஸ்திவாரத்தையே சத்தமில்லாமல் அசைத்தவர் யார் என்றால் அது தமிழக வீரர் நடராஜன்தான். நேற்று தொடக்கத்தில் இருந்து நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்தார். இது டி 20 மேட்ச்.. விக்கெட் எடுப்பதை விட ரன் செல்வதை கட்டுப்படுத்துகிறேன் பாருங்கள் என்று நுணுக்கமாக பவுலிங் செய்தார்.
ரன் செல்வதை கட்டுப்படுத்தினார்
விக்கெட் எடுக்க ஆசைப்பட்டு சிக்ஸ் கொடுக்காமல்.. துல்லியமான யார்க்கர், பவுன்சர்களை போட்டு ரன் ரேட்டை குறைத்தார். இதனால் பெங்களூர் அணிக்கு போக போக பிரஷர் ஏறியது. நடராஜன் ஓவரில் பந்தை தொட முடியாத வீரர்கள்..மற்ற பவுலரின் பந்துகளில் அதிரடி காட்ட முயன்று மோசமாக சொதப்பி அவுட்டானார்கள்.
அசைத்தது
நேற்று நடராஜன் கொடுத்த பிரஷர்தான் பெங்களூர் அணியின் அஸ்திவாரத்தையே அசைத்தது. நேற்று 4 ஓவர் போட்ட நடராஜன் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஓவருக்கு 2.80 ரன்கள் வீதம்தான் கொடுத்தார். அதிலும் நடராஜன் நன்றாக பேட்டிங் செய்து வந்த வாஷிங்க்டன் சுந்தர் விக்கெட்டையும் வீழ்த்தினார். .
சிறப்பான ஸ்பெல்
நடராஜன் கொடுத்த 11 ரன்களில் கடைசி ஓவரில் மட்டும் 2 ரன்கள் கொடுத்தார். அதற்கு முன் 3 ஓவரில் வெறும் 9 ரன்கள்தான் கொடுத்தார். பும்ராவிற்கு இணையாக நேற்று இவர் பந்து வீசினார். முக்கியமான பவுலர்களை இழந்து கஷ்டப்படும் ஹைதராபாத் அணிக்கு இவர் புதிய டெத் பவுலராக நடராஜன் உருவெடுத்து உள்ளார்
கோலி
இவரின் பவுலிங்கில் ஆட முடியாமல் நேற்று பெங்களூர் அணியின் முக்கியமான வீரர்கள் எல்லோருமே திணறி போனார்கள். அதிலும் இவர் துல்லியமாக போடும் யார்க்கர் பந்துகளை பார்த்து கோலியே ஒரு பக்கம் மிரண்டு போய்விட்டார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் கூடுதல் பவுலராக இடம் பிடித்து இருக்கும் நடராஜன்.. விரைவில் ஆடும் அணியில் இடம்பெற கூட வாய்ப்புள்ளது.