அர்ச்சனா மட்டும் இல்லை பாலாவும் தான்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய சனம்.. கைதட்டிய ரியோ! (வீடியோ, படங்கள்)

பாலா என்னவோ தான் ரொம்ப உத்தமன் மாதிரி, தொடர்ந்து அர்ச்சனா மற்றும் ரியோ ராஜை மட்டுமே டார்கெட் பண்ணி பேசும் போது, பாலாவும் இன்ஃப்ளூயன்சர் தான் என சனம் ஷெட்டி கேப்பில் கிடா வெட்டினார்.
பாலாஜி முருகதாஸ் மேல கொலை வெறியில் இருந்த ரியோ ராஜ், உடனே பலமாக கைகளை தட்டி சனம் ஷெட்டியை பாராட்டினார்.
கமல் ஆரம்பித்த கலகம் ஆரம்பமே பிக் பாஸ் வீட்டில் சண்டையை மூட்டி விட்டது.
பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸிடம் இருந்து நிகழ்ச்சியை தொடங்கிய கமல், அந்த குரூபிசம் அல்லது இன்ஃப்ளூயன்ஸ் பற்றி பேச சொல்ல, ரெடியான பாலாஜி, ரியோ ராஜ், சோமசேகர், நிஷா என எல்லோர் பெயரையும் சட்டென சொல்லிட்டு வந்துட்டு, அர்ச்சனாவின் பெயரை மட்டும் சொல்லும் போது தட்டுத் தடுமாறி கடைசியாக அவங்க பெயரையும் சொன்னார்.
அம்மா இல்லை அக்கா
உன்னை என் புள்ளை மாதிரி நினைக்கிறேன்னு என்னதான் அழுது அர்ச்சனா சீன் போட்டாலும், பாலாஜி முருகதாஸுக்கு இன்னமும் அர்ச்சனாவின் மீது நம்பிக்கையே இல்லை. அம்மா என்று சொல்லாமல், மரியாதைக்காக அக்கா என அழைத்ததில் இருந்தே அதனை புரிந்து கொள்ள முடிகிறது.
கேப்பில் கிடா வெட்டிய சனம்
பாலாஜி முருகதாஸ் இந்த வீட்டில் குரூபிசம் இருக்கு அதை அர்ச்சனாவும், ரியோவும், நிஷாவும் நல்லாவே பண்றாங்க என சொல்ல, உடனே கை தூக்கிய சனம் ஷெட்டி, இந்த வீட்டில் இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு சார், அது பாலா சொல்ற மாதிரி அர்ச்சனா மற்றும் ரியோ மட்டும் பண்ணல, பாலாஜியும் நல்லாவே பண்றாரு என நச்சென போட்டு உடைத்தார்.
கைதட்டிய ரியோ
சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸின் முகத்திரையை கிழித்துத் தொங்க விட்டதை பார்த்ததும் ஹேப்பியான ரியோ ராஜ், இரு கைகளையும் தட்டி தனது மனக் குறைகளை எல்லாம் போக்கிக் கொண்டார். சனம் ஷெட்டி சொன்னது 100 சதவீதம் உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக ரியோ செய்ததை பார்த்த ரசிகர்கள், அதை நீ ஏன் பா பண்ணுற என கிண்டல் அடித்து வருகின்றனர்.
பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss