பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலம்.. அதிகாரப்பூர்வமாய் அறிவித்த கமல்.. கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகர் வேல்முருகன் இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர் ஒருவர் வாரம் தோறும் நாமினேட் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த சீசனில் முதல் வாரத்தில் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது. அடுத்த இரண்டாம் வாரத்தில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டானார்.
பாஸை பயன்படுத்தி
கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித் குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ட்டானார். ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃபிரி பாஸ் இருந்ததால் அதனை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் நீடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
11 போட்டியாளர்கள்
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் 11 போட்டியாளர்கள் இடம்பெற்றனர். இதனால் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கடைசியில் இருவர்
நேற்றைய எபிசோடில் சனம் உட்பட 6 பேர் சேவ்வாகினர். இந்நிலையில் இன்று எஞ்சிய 5 பேரில் யார் வெளியே போகப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் ஒவ்வொருவராய் காப்பாற்றிய கமல், கடைசியில் ஆஜித்தையும் வேல்முருகனையும் விட்டு வைத்தார்.
வேல்முருகன்தான்
ஆனால் சனிக்கிழமையான நேற்றே இன்றைய எபிசோடுக்கான ஷுட்டிங் முடிந்து விட்டது. அப்போதே வேல்முருகன்தான் வெளியேறியதாக தகவல் வெளியானது. அதனால் ஆஜித், வேல் முருகன் என இறுதி கட்டத்திற்கு வந்த போது வேல்முருகன்தான் என்பது உறுதியானது.
கண்ணீருடன் பிரியா விடை
அதன்படியே எவிக்ஷன் கார்டை காட்டி அதிகாரப்பூர்வமாய் அறிவித்தார் கமல். பிக்பாஸை விட்டு வெளியேறிய வேல்முருகனை சக ஹவுஸ்மேட்ஸ் கட்டிப்பிடித்து கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர். வேல்முருகனும் கலங்கியப்படியே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss