இந்த 5 பேருதான் பிக்பாஸ் வீட்டையே ஆட்டிப்படைக்கிறது.. ஆளைக் காட்டி போட்டுக்கொடுத்த பாலாஜி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டின் இன்ஃபுளுயன்ஸர்கள் யார் என்பது குறித்து கமலிடம் பளீச்சென கூறியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.
பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ஷிப்புக்கான டாஸ்க் கடந்த வியாழக் கிழமை நடைபெற்றது.
இதில் பாலாஜி, சோம் சேகர், சம்யுக்தா ஆகியோர் பங்கேற்றனர். இதில் விதி முறைகள் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்ததார்.
கேப்டன் டாஸ்க்
இதனை தொடர்ந்து டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தூக்கிப்போட்ட பந்துகளை மூன்று பேரும் சேகரிக்க வேண்டும். யார் அதிக பந்துகளை சேகரிக்கிறார்களோ, அவர்களை பிக்பாஸ் வீட்டின் கேப்டன்.
ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தி
அதன்படி ஹவுஸ்மேட்ஸ் போட்ட பந்துகளை சம்யுக்தா, சோம், பாலாஜி ஆகியோர் பொறுக்கினர். இதில் பாலாஜி தான் சேகரித்த பால்களை சம்யுக்தாவின் கூடையில் போட்டார். அதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அதிருப்தி அடைந்தனர்.
பாலாஜியிடம் கேட்ட கமல்
ஆனால் தன்னுடைய கேமை ஏன் விளையாட வில்லை என ஹவுஸ்மேட்ஸ் கேட்டனர். அப்போதே கேப்டன் என்பவர் யாராலும் இன்ஃபுளுயன் ஆகக்கூடாது என்று கூறினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கேப்டன்ஷிப் கேமை விட்டுக்கொடுத்ததற்கான காரணம் என்ன என பாலாஜியிடம் கேட்டார் கமல்.
நேரடியாக சொல்லுங்கள்
இன்ஃபுளுயன்ஸ் ஆகும் ஒரு நபர் கேப்டனாக கூடாது என்று நினைத்தீர்களா என்று கேட்டார் கமல். அதற்கு பதில் அளித்த பாலாஜி இருக்கலாம் என மழுப்பலாக கூறினார். ஆனால் விடாத கமல், நேரடியாகவே சொல்லுங்கள் என்றார் கமல்.
ஆட்டிப் படைக்கும்
அதற்கு பதில் அளித்த பாலாஜி, ஆமாம் சார் இந்த வீட்டில் இன்ஃபுளுயன்ஸர்ஸ் இருக்கிறார்கள் என்றார் பாலாஜி. யார் என்று சொல்லுங்கள் என கமல் கேட்க, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், வேல்முருகன் என 5 பேரும் ஒரு குரூப். இவர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார்கள் என்றார்.
நாங்கள் வளர்ந்தவர்கள்
ஆனால் அதனை ரியோவும் அர்ச்சனாவும் மறுத்தனர். ரியோ, அவர் சொல்வது போல் நான் யாரை இன்ஃபுளுயன்ஸ் செய்தேன் எனக்கு தெரியவில்லை என்றார். அர்ச்சனாவும் நாங்கள் வளர்ந்தவர்கள், அப்படி நடந்துகொள்ளவில்லை என்று மறுத்தார்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss