கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த 3 பொருளை தினமும் மறக்காம சுத்தம் செய்யுங்க… !! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியின் வாழ்வது என்பது மிகவும் கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இந்த சூழ்நிலை நமக்கு நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது போன்ற பல நல்ல விஷயங்களைக் கற்பித்திருப்பதை நாம் மறுக்க முடியாது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததும் நம் வீட்டின் மூலை முடுக்கு முதல் நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சித்தோம். தொற்று அபாயத்தைத் தவிர்ப்பதற்காக கைகளை அடிக்கடி கிருமி நீக்கம் செய்தோம்.
ஆனால் காலப்போக்கில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றை லேசாக எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் தற்போது கொரோனா வழக்குகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குளிர்காலத்தில் கொரோனா வழக்கு மோசமான அளவில் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகளும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாம் கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போது கொரோனா நோய்த்தொற்றின் அபாயத்தைத் தவிர்க்க தினந்தோறும் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டிய பொருட்கள் குறித்துக் காண்போம்.
ஸ்மார்ட்போன்
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பல வகையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் வீட்டிற்குள் கொண்டு வருகின்றன. சொல்லப்போனால் எங்கு சென்றாலும் நாம் கையில் கொண்டு செல்லும் மொபைல் போன் மிகவும் மோசமான ஈ.கோலை, ஸ்டேப் மற்றும் ஸ்ட்ரெப் உள்ளிட்ட கிருமிகளால் நிறைந்துள்ளது. ஒரு ஆய்வின் படி, நமது செல்போனில் கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகமாக பாக்டீரியாக்கள் உள்ளன.
எப்படி சுத்தம் செய்யலாம்?
மொபைல் போனில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கு ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நீக்க துடைப்பான்களைக் கொண்டு துடைத்தெடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை போனை துடைத்து எடுப்பதன் மூலம் கொரோனா கிருமிகள் நம்மை நெருங்குவதைத் தவிர்க்கலாம்.
மாஸ்க்
தற்போது மாஸ்க் நாம் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நமது சுவாச மண்டலத்திற்குள் நுழைவதைத் தடுத்து பாதுகாக்கிறது. வெளியே செல்லும் போது நாம் அணியும் மாஸ்க் தூசிகள் மற்றும் பல வகையான கிருமிகளுக்கு வெளிப்படுகிறது. இப்படி வெளியே செல்லும் போது ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்கை மீண்டும் துவைக்காமல் பயன்படுத்தினால், அதில் உள்ள கிருமிகள் எளிதில் உடலினுள் நுழைந்து நோய்வாய்ப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
எப்படி சுத்தம் செய்வது?
மாஸ்க்குகளில் பல வகைகள் உள்ளன. வால்வு உள்ள மாஸ்க்குகள் ஆபத்தானவை என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. எனவே மிகவும் பாதுகாப்பான மாஸ்க்காக துணி மாஸ்க்கை கூறலாம். அதோடு துணி மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்திய பின்னர், சோப்பு நீரில் அலசிவிட்டு ஒருமுறை சுடுநீரில் அலசினால், துணி மாஸ்க்கில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
கதவு கைப்பிடிகள்
நாம் அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டிய மூன்றாவது முக்கிய பொருள் தான் கதவு கைப்பிடிகள். ஒரு நாளைக்கு பலமுறை தொடும் ஒன்று தான் கதவு கைப்பிடிகள். வீட்டு கைப்பிடிகளை நாம் தினந்தோறும் எளிதில் கிருமி நீக்கம் செய்யலாம். ஆனால் வெளியிடங்களுக்கு செல்வதானால், கதவுக் கைப்பிடிகளைத் தொடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கிருமிகள் இந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே எதைத் தொட்ட பின்னரும் சானிடைசர் கொண்டு கைகளை கிருமி நீக்கம் செய்ய மறவாதீர்கள்.
முடிவு
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்றும் தான் மிகவும் ஆபத்தானது. இவற்றை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறை சுத்தம் செய்வதால், கொரோனாவால் நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்கலாம். சொல்லப்போனால், கொரோனா வைரஸ் மற்றதை விட இந்த மூன்றின் மூலம் எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடும். ஆகவே இவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய மறவாதீர்கள்.
அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா!!
மூன்றாம் தவணைக்கா க பாடசாலைகளைதிறப்பது குறித்து ஜி.எல். பீரிஸ் தெரிவித்தது என்ன?
மாவட்டங்களுக்கு இடையிலான மக்களின் பயணத்தை நிறுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.!!
கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்துகளில் பயணித்தோரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை!!
தொற்றாளர்களை இனங்காண்பதில் பலத்த இடர்பாடு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!!
மேல்மாகாண ஊரடங்கு நாளை காலை தளர்த்தப்படுமா? நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே முடிவு!!
முல்லைத்தீவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 15 பேர் தனிமைப்படுத்தல்!!
யாழ்ப்பாணத்தில் 14 பேருக்குக் கொரோனா; 956 பேர் தனிமைப்படுத்தலில்!!
அன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி! (வீடியோ, படங்கள்)
தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பொலிசார் வெளியில் நடமாடுவதாக குற்றச்சாட்டு!!
வவுனியா கூமாங்குளம் இளைஞர் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக உயர்வு!!
பிசிஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் வருகை!!