;
Athirady Tamil News

ரிப்பன் கட் பண்ண ரம்யா.. சிரித்துக் கெடுத்த ஷிவானி.. அனிதா பிரச்சனை.. கமலுக்கு பதில் சொன்ன இருவர்! (வீடியோ, படங்கள்)

0

அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுக்காம ஆஃப் பண்ண சம்யுக்தாவை பற்றி பேசுவதை விட அதற்கு ரிப்பன் கட் பண்ணிய ரம்யா பாண்டியனையும், ஷிவானியையும் மறைமுகமாக வெளுத்து விட்டார் கமல். எவிக்‌ஷனுக்கு முன்னாடி இந்த வாரம் விட்ட குறை தொட்ட குறையெல்லாம் பைசல் பண்ணிடலாம் என கமல் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார்.

மற்றவர்கள் பேசும் போது அமைதியாக இருந்து விட்டு, அனிதா பேசும் போது அலம்பல் பண்ண இருவரையும் பார்த்து கேள்வி எழுப்பினார் கமல்.

அழுத ரம்யா

போட்டியாளர்கள் மிஸ் பண்ணும் ஒரு நபர் பற்றி பேச பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அர்ச்சனா திரிஷ்டி உடைத்தவுடன் அம்மா ஞாபகம் வந்துடுச்சுன்னு அழுது அந்த நிகழ்ச்சியை அழுகாச்சி நிகழ்ச்சியாக ஆரம்பித்து வைத்தார் ரம்யா. அடுத்து வந்தவர்களும், அழுதபடியே பேசினார்கள்.

லாங்கா போகுது அனிதா

சம்யுக்தா உள்பட எல்லோரும் அவங்களுக்கு பிடிச்ச நபர்களை மிஸ் பண்ணும் தருணங்களை பகிர்ந்தனர். அனிதா சம்பத், தனது கணவர் பற்றி ரொம்பவே உருகி பேசும் போது, லாங்கா போகுது அனிதா என சம்யுக்தா ஸ்டாப் பண்ணது, அனிதாவை ரொம்பவே அப்செட் ஆக்கியது. சம்யுக்தா அப்படி நிறுத்த ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்டோர் தான் காரணம் என்பதை நன்றாக புரிந்து கொண்ட கமல், அவர்களிடம் இது பற்றி விசாரித்தார்.

ரிப்பன் கட் பண்ணிய ரம்யா

ரம்யா தான் அனிதா டிராக் மாறி போறாங்கன்னு ஆஜித்திடம் கிசுகிசுத்து விட்டு, முதல் ஆளாக அனிதா பேசும் போது சலசலப்பை கிளப்பினார். அதை நல்லா நோட் பண்ண கமல், சம்யுக்தா ஸ்டாப் பண்ண சொல்றதுக்கு நீங்க தான் ரிப்பன் கட் பண்ணிங்களே என சைலன்ட் கில்லர் ரம்யா பாண்டியனை மறைமுகமாக வெளுத்து விட்டார்.

மன்னிப்பு கேட்ட ரம்யா

கமல் தன்னை பற்றி பேசுவதை புரிந்து கொண்ட ரம்யா, என்கிட்ட இருக்க கெட்டப் பழக்கம் என்னன்னா சிரிப்பை கட்டுப் படுத்த முடியாது. டாப்பிக் மாறி எங்கேயோ போகுதேன்னு நினைச்சி சிரிச்சுட்டேன். கேலரி மாதிரி செட்டிங் போட்ட உடன் காலேஜ் ஃபீலிங் வந்துடுச்சு, நான் பண்ணது தப்புத் தான் சோ சாரி என மன்னிப்பு கேட்டார் ரம்யா.

சிரித்துக் கெடுத்த ஷிவானி

ஷிவானி.. என அடுத்து ஷிவானி பக்கம் கமல் திரும்ப, ஐயையோ மாட்டிக்கிட்டோமே என முழித்த ஷிவானி, நீங்களும் தான் கமெண்ட் அடிச்சீங்க என கமல் சொன்னதும், ஆமா.. என ஒப்புக் கொண்டு, வெளி உலகத்தில் மிஸ் பண்றவங்கள இங்க இருக்கிறவங்கள யாரை உங்களுக்கு ஃபீல் ஆகுதுன்னு இருந்துச்சு, சில பேர் சம்பந்தமில்லாமல் பேசுனாங்க என ஆரி மற்றும் அனிதாவை குறிப்பிட்டார்.

அவங்க மட்டும் தானா

குழந்தை ராயானை மிஸ் பண்ணதை பத்தி பேசிய சம்யுக்தா, இந்த வீட்டில் யாரை அப்படி நினைத்ததாக பேசினார்கள், பிறந்த குழந்தையை பிரிந்து தவிப்பது பற்றி பேசிய ரியோ ராஜ், இந்த வீட்டில் எந்த தவழும் குழந்தையை பார்த்து புலம்பினார். அதெல்லாம் விடுங்க அனிதா சம்பத் அவங்களோட புருஷனை பத்தி பேசும் போது, இந்த வீட்டில யாரையாவது அப்படி நினைச்சு பேச முடியுமா? அட போங்க ஷிவானி!

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − one =

*