;
Athirady Tamil News

அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்!!

0

பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்துள்ளதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக அரியணையில் அமரப்போவது யார் என்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும். குடியரசுக்கட்சியா, ஜனநாயகக் கட்சியா அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது பற்றிய எதிர்பார்ப்புடன் பல கோடி அமெரிக்கர்கள் காத்திருக்கின்றனர்.

கொரோனா அச்சத்திற்கு இடையே 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ள நிலையில் இன்றும் பரபரப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசுக்கட்சியின் யானையா? ஜனநாயகக் கட்சியின் கழுதையா? அமெரிக்க அதிபர் ரேஸில் முந்தப்போவது எந்த சின்னம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோ பிடன் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. ஜோதிடர்களோ சூரியனும், குருவும் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாக கணித்துள்ளனர். இந்த நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பெனிசில்வேனியா மாகாணத்தில் தேர்தல் தேதி முடிந்து 3 நாட்கள் வரை மின்னஞ்சல் வழியாக வாக்குகள் செலுத்த நீதி மன்றம் அனுமதியளித்து தீர்ப்பு கொடுத்தது. இதற்கு தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். ‘இதனால் கடும் விளைவுகள் ஏற்படும்’ என கோபத்துடன் கூறியிருக்கிறார். பெனிசில்வேனியா மாகாணத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டுக்குமே கணிசமான வாக்கு சதவிகிதம் இருக்கிறது. ஆனால், சமீபமாக ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட சர்வேயில்கூட ட்ரம்பை விட ஜோ பிடனே முன்னிலையில் இருந்தார். எனவேதான் டிரம்ப் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + nineteen =

*