;
Athirady Tamil News

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு இவர் தான் வெளியே போகிறார்.. அடித்து சொல்லும் நெட்டிசன்ஸ்.. யாரு? (வீடியோ, படங்கள்)

0

என்ன வர வர, பிக் பாஸ் நிலைமை இப்படி ஆகிடுச்சே, திங்கட் கிழமை எபிசோடில் நாமினேஷன் முடிந்ததுமே, இந்த பிரபலம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார் என நெட்டிசன்களே ஆருடம் இல்லைங்க அடித்தே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

சீக்கிரமே வீட்டில் இருந்து கழித்துக் கட்டவே சில மிக்சர் போட்டியாளர்களை ஒவ்வொரு சீசனிலும் எடுப்பது வழக்கம்.

இந்த முறை, அது கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். ஒட்டுமொத்த ரசிகர்களை கவரும் அளவுக்கு இந்த சீசனில் இன்னும் எந்த போட்டியாளரும் விளையாட வில்லை என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.

பெரிய ஓட்டை

பிக் பாஸ் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை இயக்குபவர்கள், நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் அதன் சீக்ரெட்களை காற்றில் பறக்க விடாத படி பாதுகாத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்துகளை கொடுக்க வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த சீசனில் எல்லாமே ஓட்டையாக இருந்து லீக் ஆகி வருவதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

முதல் எலிமினேஷன்

முதல் வாரத்தில் எவிக்‌ஷன் கிடையாது என எல்லோரையும் பிக் பாஸ் காப்பாற்றினார். இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகாவை தான் வெளியேற்ற போகிறார்கள் என்றும், ரேகா வெளியேறி விட்டார் என்றும் சன் டே நிகழ்ச்சிக்கு முன்னமே வெள்ளியன்றே தெரிந்து விட்டது. பிக் பாஸ் போட்டியாளர்கள் இத்தனை வாரங்கள் தான் வீட்டில் தங்குவார்கள் என்கிற பட்டியலும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

ஆஜீத்தும் அலாவுதீன் பூதமும்

மூன்றாவது வாரம் வீட்டை விட்டு ஆஜீத் தான் வெளியேற போகிறார் என்பதை, எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கேமை கொண்டு வந்த உடனே ரசிகர்கள் கணித்து விட்டனர். ஆஜீத்தை சும்மா ஜோசியர் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி விட்டு, அவரை எலிமினேட் செய்வது போல எலிமினேட் செய்து, அலாவுதீன் பூதத்தால் காப்பாற்றி விட்டனர்.

சரி செய்தாக வேண்டும்

போன வாரம் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீர் மல்க வெளியேறினார். ஆனால், வேல்முருகன் தான் வெளியேறப் போகிறார் என்பதையும் ரசிகர்கள் முன்னதாகவே கணித்து விட்டனர். யார் வெளியே போவாங்க, அய்யய்யோ இவங்க வெளியே போய்ட்டாங்களா என ரசிகர்கள் எந்தவொரு சர்ப்ரைஸும் இன்றி நிகழ்ச்சியை பார்ப்பது ரொம்பவே போரிங் ஆன விஷயம். இதை சீக்கிரமே அவர்கள் சரி செய்தாக வேண்டும்.

இந்த வாரம் யார்

இந்நிலையில், திங்கட் கிழமை எபிசோடை பார்த்த ரசிகர்கள், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் தான் வெளியேறுகிறார் என இப்பவே அடித்து கூறி வருகின்றனர். எவிக்‌ஷனுக்கான நாமினேஷனை பார்த்த ரசிகர்கள் உடனே சோமசேகர் தான் இந்த வாரம் வெளியேற உள்ளார் என்று உறுதியாக கூறி வருகின்றனர்.

விஜய் டிவி புராடக்ட்ஸ்

கேபி, ஆஜீத், ஷிவானி நாராயணன், ரியோ, நிஷா எல்லாம் நல்லா விளையாடவே இல்லை என்றாலும், எவிக்‌ஷனுக்கு கூட தேர்வு செய்யாமல் அவர்களை காப்பாற்றி வருவது நல்லாவே தெரியுது. ஆரி, சோமசேகர், அனிதா, சுரேஷ், சனம் ஷெட்டி, பாலாஜி, அர்ச்சனா என எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களில் ரொம்பவே வீக்கானவராக சோமசேகர் தெரிவதாலே ரசிகர்கள் அவரது பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

அதுக்குத்தான் சோமை

தலைவராக்கல பாலாஜி முருகதாஸை ஃபிராடுத் தனம் பண்ணி விளையாடலாம் என பிக் பாஸ் சொல்லும் போதே, இந்த வார எவிக்‌ஷன் யார் என்று தெரிந்து விட்டது. மேலும், ரம்யா பாண்டியனை வைத்து சம்யுக்தாவை இந்த வாரம் தலைவர் போட்டிக்கு நாமினேட் பண்ண வைத்தது. பாலாஜி, தான் விளையாடாமல் சம்யுக்தாவுக்கு பால் அள்ளிப் போட்டு, சோமசேகரை தலைவர் ஆக்க விடாமல் விளையாடியதும் சம்யுக்தாவை தலைவராக்கி இந்த வாரம் காப்பாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

நல்லா பண்றீங்க

கமல் சாரை வைத்து வாரம் வாரம் இது ஸ்க்ரிப்ட் இல்லை, ஸ்க்ரிப்ட் இல்லை என சொல்ல வைத்து விட்டு, இப்படி பச்சையாக ஸ்க்ரிப்ட் பண்ணி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை, கொஞ்சமாவது சுவாரஸ்யத்துடன், சர்ப்ரைஸ் உடனும் நடத்தலாமே என்பதே அதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்ட ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 6 =

*