கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!

கொரோனா நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோமாஹம வைத்தியசாலையின் தீவிரகிசிச்சை பிரிவு சத்திரசிசிச்சை பிரிவு உட்பட சில பகுதிகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்புள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டவரிடம் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை ஹபராதுவையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அமைச்சரவை பாதுகாப்புபிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது இரு மகன்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என … Continue reading கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!