வவுனியா திருநாவற்குளம் யங் லைன் வி.க வெற்றிக்கிண்ணம் மகாசேன அணியின் வசம்.! (படங்கள் இணைப்பு)
வவுனியா திருநாவற்குளம் யங் லைன் விளையாட்டுக் கழகம் 2020ம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த முன்று வாரமாக திருநாவற்குளம் மாணிக்கதாசன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் தலைவர் வினோபிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
07/11/2020 இறுதி போட்டியில் மகாசேன எதிர் வோரியஸ் அணிகள் மோதிய போட்டியில் மகாசேன அணி 4 இலக்குகளால் வெற்றியை தனதாக்கியது.
போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக வோரியஸ் அணியின் டானியல் அவர்களும், சிறந்த பந்து வீச்சாளராக மகாசேன அணியின் பண்டார அவர்களும், தொடர் ஆட்ட நாயகனாக மகாசேன அணியின் துசார அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியின் அதிதிகளாக வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் , கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, கழகத்தின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”