இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!

இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேவைப்படும் நிதியை பெற்றுக்கொடுத்தல், தடுப்பூசிக்கான தேவையுடையவர்களை அடையாளங்காணல், அது தொடர்பிலான பௌதீக வள முகாமைத்துவம், தகவல்களை பெற்றுக்கொள்ளல், விடயங்களை முன்வைத்தல் என்பனவற்றை குறித்த குழு முன்னெடுக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றைத் தடுப்பதற்காக இலங்கையில் அதற்கான தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஔடதங்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியும் பங்குபற்றியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!
தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!
கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!
வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!