ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!

ரயில் சேவையில் பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பயணிகள் தொடர்பான தகவலறிதல் தொடர்பில் முன்வைத்த திட்டங்களை ரயில் திணைக்களம் செயற்படுத்தவில்லை.
ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது.
ரயில் சேவையில் காணப்படும் குறைபாடுகள் திருத்திக் கொள்ளாவிடின் பொது பயணிகளின் சுகாதார பாதுகாப்பு சவாலுக்குட்படுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று திங்கட்கிழமை 43 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன. பல்வேறு பிரதேசத்தில் இருந்து கொழும்பு நகருக்கு இன்று மாத்திரம் 5212 பேர் ரயில் ஊடாக பயணம் செய்துள்ளனர்.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தொடர்பில் தகவல் அறிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பயணிகள் தங்களின் சுய விபரங்களை எழுதி போட வேண்டும். பின்னர் ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் சேவையாளர்கள் தகவல்களை எண்ணிக்கைபடுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!
தப்பிச் சென்ற பேலியகொடை கொவிட் தொற்றாளர்கள் பொலன்னறுவையில் கண்டுபிடிப்பு!!
கொரோனா தொற்றை 20 நிமிடங்களில் அடையாளம் காண முடியும்; பரிசோதனை விரைவில் : சுகாதார அமைச்சு!!
வடக்கின் கிளினிக் நோயாளர்கள் தமக்கான மருந்துகளைப் பெறுவது எப்படி?; மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!