கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விடயத்தில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதியுங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள்!!

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளை முன்னெடுக்கும்போது மதசிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்கவேண்டும் பாதுகாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமது மத நம்பிக்கைளுக்கு மீறி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது குறித்து முஸ்லீம் சமூகம் கரிசனை வெளியிட்டு வரும் நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தற்போதைய நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயரூவான் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மண்ணின் நிலைமை மற்றும் கொரோனா வைரசின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப காரணங்களை கருத்திலெடுத்த பின்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தார் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் அதனை மாற்றுவதற்கான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
ரயில் சேவையில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை – ரயில் நிலைய அதிபர் சங்கம் சாடல்!!
முடக்க நிலைமை 16 ஆம் திகதி வரையே! இராணுவத் தளபதி தெரிவிப்பு!!
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி!!
கொரோனா வைரசிலிருந்து மீண்டவர்களால் ஆபத்தில்லை-தொற்றுநோய் வைத்தியர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
வெலிக்கடைச் சிறைச்சாலையில் மேலும் 72 கைதிகளுக்கு கொரோனா தொற்று!!
ரயில், பஸ் சேவைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகும் – முடக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது!!
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் ஊரடங்கினை தளர்த்துவதா? எதிர்கட்சி அதிர்ச்சி!!
அரசாங்கத்தின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்!!
கத்திக்குத்தினால் காயமடைந்தவருக்கு கொரோனா – ஹோமாஹம வைத்தியசாலையின் சில பகுதிகள் மூடப்பட்டன!!