ஓடுங்க.. ஓடுங்க.. எரிந்து கொண்டே வந்து மைதானத்தில் விழுந்த பிளேன்.. அருகே இந்திய அணி.. பரபர சம்பவம்!! (வீடியோ, படங்கள்)

சிட்னியில் விமானம் ஒன்று எரிந்து கொண்டே வந்து மைதானத்தில் விழுந்தது. பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சில கிலோமீட்டர் தொலைவில் பயணிகள் விமானம் ஒன்று எரிந்து கொண்டே வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ஆணி
வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற கையோடு ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது இந்திய வீரர்கள் ஹோட்டலில் தங்கி உள்ளனர்.
குவாரன்டைன்
முதல் வாரம் குவாரன்டைனில் இருக்கும் இந்திய வீரர்கள் ஹோட்டலில் சிறிய அளவிலான பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளனர். குவாரன்டைன் காலகட்டம் முடிந்த பின்னரே இந்திய வீரர்கள் முழு வீச்சில் பயிற்சி மேற்கொள்ள முடியும்.
கால்பந்து மைதானம்
இந்திய வீரர்கள் தங்கி உள்ள ஹோட்டலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் குரோமர் பார்க் எனும் மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் கால்பந்து வீரர்களும், உள்ளூர் கிளப் கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி செய்வது வழக்கம்.
விழுந்த விமானம்
அங்கே நவம்பர் 15 அன்று விடியற்காலை 4.30 மணி அளவில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தின் எஞ்சின் பாதி வழியில் செயல்படாமல் போனதால் தடுமாறி கீழே விழுந்ததாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
ஓடுங்க!!
குரோமர் கிரிக்கெட் கிளப்பின் துணைத் தலைவர் கிரேக் ரோலின்ஸ் அந்த சம்பவத்தின் போது மைதானத்தில் இருந்துள்ளார். அவர் விமானம் கீழே விழுவதை கண்டு ஷெட்டில் இருந்தவர்களிடம் ஓடுமாறு கூறி அவர்களை வெளியேற்றி உள்ளார். அவர்கள் வேகமாக ஓடி உள்ளனர்.
உயிர் சேதம் இல்லை
அதன் பின் அங்கே விமானம் விழுந்தது. பின் அவர்கள் விமானத்தின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற சென்றுள்ளனர். உள்ளே அனைவரும் உயிருடன் இருந்ததாக கூறிய அவர், பலர் பலத்த காயத்துடன் இருந்ததை குறிப்பிட்டார். உயிருடன் இருந்தது தான் இதில் முக்கியம் என்றார்.
பரபரப்பு
காலி மைதானத்தில் விழுந்த விமானம் 30 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் மீதும் விழுந்திருக்கலாம். அப்படி எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருநாள் தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நவம்பர் 27 அன்று முதல் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடிய களைப்பை போக்க தற்போது லேசான பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு உள்ளனர்.